பாகிஸ்தான் ட்ரோன்களை வீழ்த்தி.. ஜம்மு மக்களை பாதுகாக்கும் S-400 அமைப்பு.. இதன் சிறப்பம்சங்கள் என்ன!
ஸ்ரீநகர்: ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் கோபத்தில் இருக்கும் பாகிஸ்தான், காஷ்மீரில் ட்ரோன் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஆனால், ட்ரோன்களை இந்தியப் பாதுகாப்பு அமைப்பான S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு மக்களைப் பாதுகாக்கும் இந்த S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு என்றால் என்ன! இதன் சிறப்பு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஆபரேஷன் சிந்தூரில் அடி வாங்கிய பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்று வருகிறது. ஏற்கனவே, நேற்றைய தினம் இந்தியாவின் 15 நகரங்கள் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும் இந்தியப் பாதுகாப்புப் படை அதை முறியடித்துவிட்டது.

இதற்கிடையே இன்றைய தினம் மீண்டும் அவர்கள் தாக்குதல் நடத்த முயல்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயல்கிறார்கள். இதில் 8 ட்ரோன்களை இந்தியாவின் எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு வீழ்த்தியுள்ளது. ஜம்மு மக்களைப் பாதுகாக்கும் இந்த S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு என்றால் என்ன! இதன் சிறப்பு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு என்பது உலகின் மிகவும் மேம்பட்ட ஒரு நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும். அதாவது இதன் மூலம் மிகப் பரந்த இடத்திற்குப் பாதுகாப்பை வழங்க முடியும். ரஷ்யத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த எஸ் 400 பாதுகாப்பு அமைப்பால் 600 கிமீ தொலைவில் வரும் ஏவுகணை அல்லது ட்ரோன்களை கூட டிராக் செய்ய முடியும். 400 கிமீ தொலைவில் வரும் போது அதைத் தாக்கியும் அழிக்கவும் முடியும்.
கடந்த 2014ஆம் ஆண்டு S-400 ஏவுகணை அமைப்பை முதலில் சீனா வாங்கியது. அதன் பிறகு உலகின் பல்வேறு நாடுகளும் இந்த ஏவுகணைகளை வாங்கி வருகிறது. இந்தியா கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்த எஸ்400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்குகிறது. மொத்தம் 5 யூனிட்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் போட்டது.
அந்த யூனிட்களில் ஒன்று ஜம்மு காஷ்மீரைக் கவர் செய்கிறது. ஒன்று பஞ்சாப் பதன்கோட் பகுதிகளைப் பாதுகாக்கிறது. மற்றவை ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் முக்கிய பகுதிகளை பாதுகாக்கிறது.
S-400 பாதுகாப்பு அமைப்பில் மொத்தம் 3 பாகங்கள் உள்ளன. அதில் ஒன்று மிஸைல் லாஞ்சர் ( Missile launchers), அடுத்தது சக்திவாய்ந்த ரேடார், கமெண்ட் சென்டர் (command centre) என மூன்று பாகங்கள் உள்ளன. இது விமானங்கள், சாதாரண ஏவுகணைகள், டிரோன்கள், அதிவேகமாக பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கூட இடைமறித்து அழிக்கும்.
S-400 அமைப்பின் நீண்ட தூரத் திறன்கள் காரணமாக நேட்டோ உறுப்பு நாடுகள் இதை ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கிறது.
S-400 பாதுகாப்பை அமைப்பை வைத்து அனைத்து வகையான நவீனப் போர் விமானங்களையும் கட்டுப்படுத்த முடியும். அதன் ரேடாரில் 600 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைக் கண்காணிக்க முடியும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications