நீங்க குழந்தை திருமணம் பண்ணுங்க.. பாஜக பாதுகாப்பு தரும்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி வாக்குறுதி!
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால், குழந்தை திருமணத்தை ஆதரிப்பேன், அதற்கு முழு பாதுகாப்பு அளிப்பேன் என்று பாஜகவை சேர்ந்த வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்து இருக்கிறார்கள்.
Recommended Video

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால், குழந்தை திருமணத்தை ஆதரிப்பேன், அதற்கு முழு பாதுகாப்பு அளிப்பேன் என்று பாஜகவை சேர்ந்த வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்து இருக்கிறார்கள்.
தமிழகம் குழந்தை திருமணம் என்ற கொடூரத்தை எல்லாம் தாண்டி வந்து பல காலம் ஆகிவிட்டது. ஆனால் வடமாநிலங்கள் இன்னும் அந்த பிரச்சனையில்தான் சிக்கி தவித்து வருகிறது.
முக்கியமாக ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த பிரச்சனை பெரிய அளவில் உள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தானில் டிசம்பர் 7ம் தேதி நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் செய்த பாஜக வேட்பாளர் ஒருவர் கூறிய வாக்குறுதி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

என்ன வாக்குறுதி
பாஜகவை சேர்ந்த மூத்த உறுப்பினர் சோபா சவுகான்தான் இந்த வாக்குறுதியை அளித்தது. அதன்படி தான் தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏ ஆகும் பட்சத்தில் ராஜஸ்தானில் குழந்தை திருமணம் நடத்த ஆதரவு தருவேன், நானே குழந்தை திருமணங்களை நடத்தி வைப்பேன். போலீஸ் தொல்லை இல்லாமல் குழந்தை திருமணம் நடக்க ஆதரவு அளிப்பேன் என்று கூறினார்.

மக்கள் கொண்டாட்டம்
இவரின் வாக்குறுதியை கேட்டு அங்கிருந்த பாஜகவினர் உற்சாகம் ஆனார்கள். ஆம், இந்த வாக்குறுதியை கேட்டு அங்கு பாஜகவினர் பெரிய அளவில் கைதட்டி கூச்சலிட்டனர். இதனால் நேற்று வேறு சில பிரச்சாரங்களில் இதே வாக்குறுதி வேறு சில பாஜக உறுப்பினர்களால் வழங்கப்பட்டது.

யார் தெரியுமா
இந்த வாக்குறுதியை வழங்கிய சோபா சவுகான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் சவுகான் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி இவர். அதேபோல் ராஜஸ்தான் பாஜக தலைமைக்கு மிக மிக நெருக்கமானவர்.

பாஜகவிற்கு எதிர்ப்பு
பாஜகவின் இந்த வாக்குறுதி பெரிய எதிர்பலைகளை சந்தித்து இருக்கிறது. இப்படி வாக்குறுதி அளித்த வேட்பாளர்களுக்கு பாஜக கட்சி ஆதரவு அளித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications