3 பொண்டாட்டி... நான்கைந்து பிள்ளைகள் என முதல்வர் ஜெகன் பேச்சு.. பவன் கல்யாண் ஆவேசம்
Recommended Video
விஜயவாடா: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கின் பிரபல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது, நான் மூன்று திருமணம் செய்தது தான் நீங்கள் ஜெயிலுக்கு போக காரணமா என்று பவன் கல்யாண் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆந்திராவில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 1முதல் 6ம் வகுப்பு வரை பள்ளிகளில் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக்கப்படும் என்றும், தெலுங்கு உருது கட்டாயமொழி ஆக்கப்படும் என்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதற்கு தெலுங்குதேசம் தலைவர் சந்திராபு நாயுடு, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்ட பலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

3 மனைவிகள்
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, "சந்திரபாபு நாயுடு உங்கள் மகன் எந்த பள்ளியில் படித்தார்? நாளை உங்கள் பேரன் எந்த பள்ளியில் படிக்க போகிறார்? வெங்கையா நாயுடு அவர்களே உங்கள் மகனும், பேரனும் எந்த பள்ளியில் படித்தார்கள்? 3 மனைவி, நான்கைந்து பிள்ளைகள் கொண்ட பவன் கல்யாணின் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள்?

ஆங்கிலம் கட்டாயம்
ஆங்கில வழிக்கல்வியை எதிர்க்கும் இவர்கள் நெஞ்சில் கைவைத்து பதில் சொல்ல வேண்டும். இன்றைய சவால் நிறைந்த உலகில் போட்டிபோட ஆங்கில வழிக்கல்வி கட்டாயம் என்பதற்காக இந்த திட்டத்தை தொடங்குகிறேன்" என்றார்.

துரதிர்ஷ்டவசமானது
இந்நிலையில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து விமர்சித்தற்காக கோபம் அடைந்த நடிகர் பவன் கல்யாண், அரசாங்கத்தை கேள்வி கேட்டதற்காக ஜெகன் மோகன் ரெட்டி,இப்படி தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டது துரதிர்ஷ்டவசமானது.

திருமணம் காரணமா
"நான் மூன்று பெண்களை மணந்தேன் என்று நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள். எனது திருமணங்களில் உங்களுக்கு என்ன பிரச்சினை. என் திருமணங்களால்தான் நீங்கள் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தீர்களா" என்று பவன் கல்யாண் முதல்வர் ஜெகனுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications