தேசிய கீதத்தில் திருத்தம் கோரும் சர்ச்சை....தேசியக் கொடியையும் மாற்ற சொல்வாங்களோ?
டெல்லி: தேசிய கீதத்தின் 'அதிநாயகே' என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று ராஜஸ்தான் ஆளுநரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான கல்யாண்சிங் கொளுத்திப் போட்ட சர்ச்சையால் 'விபரீத' விவாதங்கள் கிளம்பியுள்ளன.. இன்று தேசிய கீதத்தை மாற்றச் சொல்லுகிறவர்கள்.. தேசியக் கொடியையும் மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துவிடுமோ என்ற அச்சமும் சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிறது..
ராஜஸ்தான் ஆளுநரான கல்யாண்சிங், தேசிய கீதத்தில் உள்ள அதிநாயகே என்ற வார்த்தை பிரிட்டிஷாரை புகழக் கூடியது என்பதால் அதை நீக்கிவிட்டு 'மங்கள' என்ற வார்த்தையைப் போடலாம் எனக் கூறியிருந்தார். இது 1911ஆம் ஆண்டே எழுந்த சர்ச்சை... மீண்டும் அதை எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை என பலதரப்பில் இருந்தும் குரல்கள் எழுந்துள்ளன.
இடதுசாரி மூத்த தலைவர் பிருந்தா காரத் இதுபற்றி கூறுகையில், கல்யாண்சிங் ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்.. அவர் இந்த நாட்டின் மக்களை பிளவுபடுத்துகிறார் என்று சாடியுள்ளார். சமூக வலைதளங்களில் இது தொடர்பாக பதிவிடப்பட்டுள்ள சில கருத்துகள்:

சமூக தீமைகளை?
Oblivious Dragon@OhTeri_ தமது ட்விட்டர் பக்கத்தில் தற்போது தேசிய கீதத்தை மாற்றச் சொல்லுகிறவர்கள்.. இந்த சமூகத்தைப் பிடித்துள்ள பேய்களைப் பற்றி என்ன சொல்ல போகிறார்கள்?
தேசியக் கொடியையுமா?
@anjan22 என்பவர், தேசிய கீதத்தை மாற்றிவிட்டு நாளை பா.ஜ.க.வில் சிலர் தேசியக் கொடியில் வெள்ளையும் காவியும் இருந்தால் போதும்.. 2 வண்ணம் மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்...
வந்தே மாதரம்..
@sri9011 என்பவர் ஆங்கிலேயர்கள் வந்தே மாதரத்தை தடை செய்தார்.. இதனால் வந்தே மாதரத்தைத்தான் தேசிய கீதமாக வைக்க வேண்டும்....
திராவிட?
@rameshsrivats என்பவர் 'அதிநாயகே'வை தேசிய கீதத்தில் இருந்து நீக்க வேண்டும் என்கிறார் கல்யாண்சிங்.. திராவிடத்தையும் நீக்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications