3 வேளாண் சட்டங்கள் ரத்து; முழுமையாக நீக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்: சட்ட நிபுணர்கள் கருத்து
பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதற்கு, வரவேற்பும், விமர்சனமும் வருகிறது. வேளாண் சட்டங்கள் வந்தபோது கடுமையாக எதிர்த்து போராடிய விவசாயிகள் போராட்டம் காரணமாக சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார், ஆனால் சட்டத்தை நீக்கி சட்டம் இயற்றினால் மட்டுமே போராட்டம் வாபஸ் என விவசாய சங்கங்களில் முக்கிய அமைப்பு தெரிவித்துள்ளது. சட்டம் ரத்து என்று சொன்னால் மட்டும் போதுமா? என்ன செய்யவேண்டும் சட்ட நடைமுறை என்ன? விரிவாக பார்ப்போம்.
அதிரடியாக அறிவிக்கப்பட்ட 3 வேளாண்சட்டங்கள்
1.வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, 2020, 2.விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் ஒப்பந்த மசோதா 2020, 3. அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020 என மத்திய அரசு வேளாண் துறை தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றியது. குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததும் அவை சட்டமானது.
வேளாண் சட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சுதந்திரப்போராட்டத்திற்கு பின் இவ்வளவு பெரிய போராட்டம், நீண்ட கால போராட்டம் நடந்திருக்குமா என்று எண்ணும் அளவுக்கு லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர்.
பஞ்சாப், ஹரியானா வட மாநில விவசாயிகளின் வீரஞ்செரிந்த போராட்டம்
போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப், ஹரியானா மற்றும் வட மாநில விவசாயிகள் டெல்லியில் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டமாக முற்றுகை போராட்டத்தை மாற்றினர். எந்த அரசியல் கட்சிகளையும் அனுமதிக்காமல் முழுக்க முழுக்க விவசாயிகள் பங்கேற்ற போராட்டம் ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. 11 கட்ட பேச்சு வார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து மத்திய அரசு இறங்கி வந்தது. இன்று காலை காணொளியில் தோன்றிய பிரதமர் மோடி தான் விவசாயிகளிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்து 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்து விடுவதாக அறிவித்தார். ரத்து செய்தாலும் நாடாளுமன்றத்தில் முறைப்படியான நடவடிக்கைகள் மூலமே சட்டத்தை ரத்து செய்ய முடியும். அது வரை சட்டம் நடைமுறையில் இருக்கும். இதைத்தான் விவசாய சங்கங்களும் வலியுறுத்துகின்றன. சட்டத்தை ரத்துச் செய்யும் 2 நடைமுறைகள் உள்ளன அவை என்ன பார்ப்போம்.
ஒரு சட்டத்தை ரத்து செய்ய ஒரு அரசியலமைப்பு சட்டப்படி சில வழிமுறைகள் உள்ளது. அரசியல் சாசனம் மற்றும் சட்ட வல்லுனர்களின் கூற்றுப்படி, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் கொண்டு வர வேண்டும். அல்லது அவசர சட்டம் இயற்றி அதை வாக்கெடுப்பு நடத்தி நீக்க வேண்டும். இது என்ன என்று பார்ப்போம்.

என்ன நடைமுறை
இந்த சட்டங்களை வாபஸ் பெறுவதாகத்தான் பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆனால் நடைமுறையில் முழுமையாக திரும்பப்பெற்றால் தான் அது முழுமையடையும். ஒரு சட்டத்தை நிறைவேற்ற என்னமாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்படுமோ அதே நடைமுறைதான் வாபஸ் பெறுவதற்கும் கடைபிடிக்கப்படும். நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், அவை ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றுள்ளன, அவை நாடாளுமன்றத்தால் மட்டுமே ரத்து செய்யப்பட வேண்டும்.
பிரதமர் சொன்ன ரத்து முழுமையடைய இதுதான் வழி
2 வழிகளில் வாபஸ் பெறலாம் என்று சொன்னதுபோல் அதில் முதல்வழி சட்டங்களை திரும்பப்பெறுவதற்காக தனியாக மீண்டும் ஒரு புதிய மசோதாவை அறிமுகம் செய்து அதை இரு அவைகளிலும் நிறைவேற்றி வாக்கெடுப்பு மூலம் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.
மற்றொரு வழி அவசரச்சட்டங்களைப் பிறப்பித்து, 3 சட்டங்களையும் திரும்பப்பெறுவதாக அறிவிக்க வேண்டும். அடுத்த 6 மாதத்துக்குள் அந்த அவசரச்சட்டத்துக்குப் பதிலாக புதிய மசோதா கொண்டு வந்து இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்ற வேண்டும். இந்த இரண்டு நடைமுறைகளையும் ஜனாதிபதி அங்கிகரிக்க வேண்டும். அப்போதுதான் பிரதமர் சொன்ன ரத்து முழுமையடையும்.
அரசியல் வல்லுனர்கள் கருத்து
அரசியலமைப்புச் சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப் "எந்தத் திருத்தம் நடந்தாலும், அதை சட்ட அமைச்சகம் சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு அனுப்புகிறது. இது தொடர்பான முன்மொழிவு விவசாய அமைச்சகத்துக்கு அனுப்பப்படும். இதன் பின்னர் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பார். மூன்று விவசாய சட்டங்களையும் ரத்து செய்ய, அரசாங்கம் ஒரு மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் சட்டத்துறை செயலரின் விளக்கம்
முன்னாள் சட்டத்துறை செயலாளர் பி.கே.மல்ஹோத்ரா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் "அரசியலமைப்புச் சட்டப்படி எவ்வாறு சட்டம் இயற்றப்படுகிறதோ அதே முறையில்தான் சட்டத்தை திரும்பப் பெறவும் முடியும். இதைத்தவிர வேறு வழியில்லை. இதற்கு ஒரே தீர்வு உடனடியாக மசோதாவைக் கொண்டு வந்து கூட 3 சட்டங்களையும் அரசால் வாபஸ் பெற முடியும். அரசியலமைப்புச்சட்டம் 245 பிரிவு நாடாளுமன்றத்துக்கு சட்டங்களை இயற்றவும், அதை திருத்தம் செய்து, திரும்பப்பெறவும் அதிகாரம் வழங்குகிறது" எனத் தெரிவித்தார்.
இது புதிதல்ல சட்டத்திருத்தம், வாபஸ் பெறுவது வழக்கமான நடைமுறைதான்
சட்டத்தை ரத்து செய்து நீக்கும் நடைமுறை நாடாளுமன்றத்திற்கு புதிதல்ல சட்டத்திருத்தம், வாபஸ் பெறுவது வழக்கமான நடைமுறைதான் கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு திரும்பப் பெறுதல் மற்றும் திருத்தப் பிரிவு ஆகியவற்றில் 58 சட்டங்களை திரும்பப் பெற்றது, வருமானவரிச் சட்டத்திலும், இந்திய நிறுவன நிர்வாகச் சட்டங்களிலும் சிறிய மாற்றங்களைச் செய்தது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications