For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா: குழந்தை கடத்துவோர் என்ற சந்தேகத்தில் 5 பேர் அடித்துக் கொலை

By BBC News தமிழ்
|

மகாராஷ்டிர மாநிலம் துளே மாவட்டத்தில், குழந்தை கடத்த வந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 5 நபர்கள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

ரெய்ன்படா பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் 5 நபர்கள் அங்கு வந்து இறங்கியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய அப்பகுதி மக்கள், அந்த 5 நபர்களும் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்கள் என்று சந்தேகித்தனர்.

கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்றவுடன், அவர்களை மக்கள் தாக்க ஆரம்பித்தனர். உயிரிழந்த 5 நபர்களும் மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரை சேர்ந்தவர்கள்.

இச்சம்பவம் குறித்து பேசிய துளே மாவட்ட எஸ்.பி ராம்குமார், "அந்த 5 நபர்களும் குழந்தை கடத்த வந்தவர்கள் என்று சந்தேகித்து கிராம மக்கள் தாக்கியதாக" கூறினார்.

கிராம மக்களின் கேள்விகளுக்கு அவர்கள் சரியாக பதிலளிக்காததை தொடர்ந்து ஒரு அறையில் வைத்து அந்த 5 நபர்களையும் பூட்டி, கற்கள் மற்றும் கம்பிகளால் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீஸாரையும் அக்கும்பல் தாக்கியுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 5 நபர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் வரும் போதே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
Five men have been lynched by a mob in India's western state of Maharashtra allegedly over rumours of child abduction spreading over WhatsApp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X