ஏவுகணை சோதனை தீவுக்கு ஏவுகணை மனிதர் பெயர்... வீலர் தீவுக்கு கலாம் பெயர் சூட்டி ஒரிசா அரசு கவுரவம்
புவனேஷ்வர் : ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பெயரை சூட்டி ஒடிசா அரசு கவுரவப்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் விதமாக பல்வேறு மாநிலங்கள் அவருடைய பெயரை கல்வி நிறுவனங்கள், சாலைகள், அரசு அலுவலகங்கள், பூங்காக்கள் மற்றும் கட்டிடங்களுக்கு சூட்டி கவுரவித்து வருகின்றன.

டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது.
இந்நிலையில் ஒரிசா அரசும் அப்துல் கலாமை பெருமைப்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் பாலாசூர் அருகே உள்ள ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு அப்துல்கலாம் பெயரை அம்மாநில அரசு சூட்டிஉள்ளது. ஏவுகணை மனிதர் என்று அழைக்கப்படும் அப்துல்கலாமை பெருமைபடுத்தவே அவரது பெயர் சூட்டப்படுள்ளதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலாசூர் அருகேஉள்ள வீலர் தீவு இந்தியாவின் மிகவும் முக்கியமான ஏவுகணை சோதனை செய்யும் தளம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவு ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications