For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி தருவதாக சொன்ன ரூ.15 லட்சம் பணம் எங்கே.. ஆர்டிஐ மூலம் கேள்வி.. தகவல் ஆணையம் விளக்கம்!

தேர்தலின் போது, மக்கள் எல்லோருடைய கணக்கிற்கும் அளிப்பதாக மோடி கூறிய ரூ.15 லட்சம் பணம் எப்போது போடப்படும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பதில் அளிக்க முடியா

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி தருவதாக சொன்ன ரூ.15 லட்சம் பணம் எங்கே.. ஆர்டிஐ மூலம் கேள்வி.

    டெல்லி: தேர்தலின் போது, மக்கள் எல்லோருடைய கணக்கிற்கும் அளிப்பதாக மோடி கூறிய ரூ.15 லட்சம் பணம் எப்போது போடப்படும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பதில் அளிக்க முடியாது என்று தகவல் ஆணையம் மறுத்துள்ளது.

    கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்த போது, பிரதமர் மோடி ''பாஜக கட்சி வெற்றி பெற்றால், கருப்பு பணம் மீட்கப்பட்டு எல்லா வாக்காளர்களுக்கும் ரூபாய் 15 லட்சம் வங்கி கணக்கில் கொடுக்கப்படும்'' என்று கூறினார். ஆனால் ஆட்சி முடிய இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில், இன்னும் யாருடைய கணக்கிற்கும் 15 லட்சம் ரூபாய் பணம் வந்து சேரவில்லை.

    When will Modi give Rs 15 lakh as promised, asks RTI, PMO replied!

    இந்த பணம் எப்போது வரும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு 2016 நவம்பர் 16 மோகன் குமார் சர்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தகவல் ஆணையம் இவ்வளவு நாட்களாக பதில் அளிக்காமல் இருந்தது.

    இதையடுத்து தற்போது, இதற்கு பதில் அளிக்க முடியாது என்று தகவல் ஆணையம், மோகன் குமாருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. அதன்படி, இந்த விஷயம் ''தகவல்'' என்று பட்டியலில் கீழ் வரவில்லை. இதுகுறித்த விவரத்தை தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளது.

    ஆனால் இந்த விஷயம் தகவல் என்ற பட்டியலின் கீழ்தான் வரும், தகவல் ஆணையம் இதில் பொய் சொல்கிறது என்று மோகன் குமார் பேட்டி அளித்துள்ளார். மத்திய அரசு மக்களை ஏமாற்றிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

    English summary
    When will Modi give Rs 15 lakh as promised, asked in RTI by Mohan Kumar Sharma. PMO replied that, it is not a 'information', so they can't give a due date.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X