ரூ.15 லட்சமும் வரவில்லை.. பதிலும் வரவில்லை.. மோடி ஆபீசை அதிர வைத்த ஒரு ஆர்.டி.ஐ கேள்வி!
டெல்லி: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில், வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது நரேந்திர மோடி கூறியிருந்தார். அந்த பணம் இன்னும் வரவில்லை, ஏன்.. என்று கேட்டு ராஜஸ்தானை சேர்ந்த கன்கையா லால் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தாலேயே பதில் அளிக்க முடியவில்லை.

மோடி பிரதமராகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் என்ற வாக்குறுதி நீர்த்துப்போயுள்ளது. இந்த நிலையில்தான் கன்கையா லால் இக்கேள்வியை பிரதமர் அலுவலகத்திடம் ஆர்.டி.ஐ மூலம் எழுப்பியுல்ளார்.
இவர், கேள்விகளுக்குப் பதில் அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் பிரதமர் அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பியிருந்தது. 7 மாதங்களாகியும் பதில் வந்தபாடில்லையாம்.
எனவே, எனது விண்ணப்பத்துக்குப் பிரதமர் அலுவலகம் பதில் அளிக்கவில்லை என்று, மத்திய தகவல் ஆணையத்துக்குப் புகார் அனுப்பியுள்ளார் கன்கையா லால்.
இதுபற்றி தகவல் ஆணையம் விசாரித்தபோது, கன்கையா லாலின் விண்ணப்பம் எங்களுக்கு வரவில்லை. இதனால், பதிலளிக்க முடியவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இப்போது விண்ணப்பத்தின் இன்னொரு பிரதியைத் தகவல் ஆணையம், பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது.
ஆர்.டி.ஐ விதிப்படி, அந்தத் துறைகளில் ஏற்கெனவே பதிவாகியுள்ள தகவல்களை மட்டுமே தருவார்கள். புதிதாகத் தகவல்களை உருவாக்கித் தர வாய்ப்பு இல்லை. ரூ.15 லட்சம் பற்றி பிரதமர் அலுவலகத்தில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டிருந்தால், இதுதொடர்பான தகவல்களைத் தருவார்கள். இல்லை என்றால், தகவல்கள் பிரதமர் அலுவலகத்தில் இல்லை எனக் கூறுவார்கள் என்று கூறப்படுகிறது.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications