இந்தியா எங்கிருந்து உருவானது? ஆச்சரியமளிக்கும் உண்மையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!
ஹைதராபாத்: இந்த உலகம் ஆரம்பத்தில் ஓரே பெரிய கண்டமாகத்தான் இருந்தது. அப்புறம் 7 கண்டங்களாக தனித்தனியாக உடைந்தது. இப்போது இந்தியா, ஆசிய கண்டத்தின ஒரு பகுதியாக, ஒரு துணை கண்டமாக இருக்கிறது. ஆனால் இது எங்கிருந்து உருவானது? என விஞ்ஞானிகள் நீண்ட காலமாக தெரியாமல் குழம்பி வந்திருந்தனர். தற்போது அதற்கான விடை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவும்-அண்டார்டிகாவும் 'கோண்ட்வானா' எனும் பெரிய கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்று ஆய்வாளர்கள் நம்பி வந்திருந்தனர். இது வெறும் கோட்பாடுதான். உண்மை என நிரூபிக்க நம்மிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை.
விஞ்ஞானிகளின் ஆய்வு
இப்படி இருக்கையில், கொல்கத்தா பிரசிடென்சி பல்கலைக்கழகத்தின் இயற்கை அறிவியல் துறை டீன் பேராசிரியர் சங்கர் போஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இதற்கான விடையை கண்டுபிடிக்க ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர். மலைகளில் ஆய்வு செய்வதற்கு காரணம் இருக்கிறது.
மலைகளில் ஆய்வு
இந்திய கண்டம் ஆசியாவுடன் மோதியதால்தான் இமயமலை உருவானது. இமயமலையில் ஆய்வு செய்ததால்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியெனில், மற்ற மலைகளை, குறிப்பாக தொடர்ச்சியாக அமைந்துள்ள மலைகளை ஆய்வு செய்தால், இதற்கு முன்னர் இந்தியா எங்கு இருந்து என்பதை கண்டுபிடிக்க முடியும். எனவேதான் ஆந்திராவில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
விஜயநகரம்-சாலூர் பகுதியில் உள்ள கிராணுலைட்டுகள் எனப்படும் பாறைகளை ஆய்வு செய்த போது..
- ஜிர்கான்
- கார்னட்
- மோனாசைட்
ஆய்வில் உறுதி
என 3 நுண்ணிய படிகங்கள் கிடைத்தன. இதுதான் முக்கியமான மேட்டர். உலகில் வேறு எங்கெல்லாம் இது இருக்கிறது என்று தேடி பார்த்தபோது.. அண்டார்டிகாவின் மலைபிரதேசங்களில் இருப்பதும், அங்குள்ள படிமங்களின் வேதியல் கட்டமைப்புகள் மற்றும் வயதுடன் இது 100% ஒத்துபோவதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அண்டார்டிகாவிலிருந்துதான் இந்தியா பிரிந்து வந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கிழக்கு தொடர்ச்சி மலைகள்

டைனோசர்கள் வாழ்ந்த காத்தில்தான் அண்டார்டிகாவில் பெரிய பிளவு ஏற்பட்டு, கோவித்துக்கொண்டு இந்தியா தனியாக பிரிந்து வந்துவிட்டது. இப்போது நாம் ஆசியாவுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறோம். இருப்பினும் அண்டார்டிகா உடனான பழைய காதலின் நினைவாக நம்மிடம் கிழக்கு தொடர்ச்சி மலைகள் இருக்கின்றன.
ஒருவேளை நாம் பிரியாமலேயே இருந்த இருந்தால் என்ன ஆகியிருக்கும்? உங்கள் கற்பனையில் கிடைக்கும் பதில்களை கமென்ட்டில் சொல்லுங்கள்.
-
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications