மாயமான மலேசிய விமானத்திற்கு இப்படி ஏதாவது ஆகியிருக்குமோ?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன ஆனது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இன்று உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன ஆனது என்ற தகவலைத் தான். இந்நிலையில் விமானம் எரிந்திருக்கலாம், கடலுக்குள் விழுந்திருக்கலாம், கடத்தப்பட்டிருக்கலாம் என்று பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளது.

விமானம் தீப்பிடித்திருந்தால் அது தெரிந்திருக்கும், உடைந்த பாகங்கள் கிடைத்திருக்கும். ஆனால் கிடைக்கவில்லை. இது தீவிரவாதிகளின் சதியா என்பதும் தெரியவில்லை.

போயிங் விமானம்

போயிங் விமானம்

போயிங் 777 ரக விமானம் பெரிய விமானம் ஆகும். அது திடீர் என்று மாயமாகிவிட முடியாது. ஏதாவது காரணம் நிச்சயம் இருக்க வேண்டும். விமானம் பறக்கையில் வானிலை மோசமாகவும் இல்லை, விமானிகளும் அனுபவம் இல்லாதவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ஜின் கோளாறு?

என்ஜின் கோளாறு?

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்தாலோ அல்லது என்ஜின் பழுதாகியிருந்தாலோ விமானிகள் உதவி கோரியிருப்பார்கள். அல்லது சில ஆபத்து சிக்னல்களை கொடுத்திருப்பார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை.

கருப்பு பெட்டி

கருப்பு பெட்டி

விமானத்தின் கருப்பு பெட்டி விமானம் தண்ணீரில் இருந்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அப்படி என்றால் ஒன்று விமானம் நீரில் இல்லை அல்லது தேடுபவர்கள் விமானத்தை தவறான இடத்தில் தேடுகிறார்கள்.

ரேடார்

ரேடார்

விமானம் ரேடாரில் இருந்து மாயமானது தான் பெரிய அதிசயமாக உள்ளது. விமானிகள் ஏன் எந்த ஒரு ஆபத்து சிக்னலும் கொடுக்கவில்லை? அவர்கள் உதவி கோர முடியாத அளவுக்கு ஏதோ திடீர் என்று நடந்திருக்க வேண்டும்.

எரிபொருள்

எரிபொருள்

விமானம் 7.5 மணிநேரம் பறக்கத் தேவையான எரிபொருள் அதில் இருந்துள்ளது. விமானம் தரை நோக்கி வந்திருந்தாலும் விமானி அவசர சிக்னல் கொடுத்திருக்கலாம். ஆனால் இல்லை. அப்படி என்றால் விமானத்தை வேறு யாராவது ஓட்டினார்களா? விமானத்தில் உள்ள டிரான்ஸ்பான்டர்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

கட்டுப்பாட்டை இழந்ததா?

கட்டுப்பாட்டை இழந்ததா?

விமானத்தில் காற்றழுத்தம் குறைந்திருந்தால் விமானிகள் ஆக்சிஜன் மாஸ்குகளை பயன்படுத்தியிருப்பார்கள். உடனே உதவி கோரி அழைத்திருந்திருப்பார்கள். விமானம் முழுவதுமாக வெடித்துச் சிதறாமல் இருந்தாலும் விமானிகள் உதவி கோரியிருப்பார்கள்.

ராணுவ ரேடார்

ராணுவ ரேடார்

விமானம் வழக்கமான பாதையில் இருந்து மாறிச் சென்றுள்ளதா? அப்படி சென்றது ரேடாரில் இப்பொழுது காலதாமதமாக ஏன் தெரிய வேண்டும். உடனே தெரிந்திருக்க வேண்டும் அல்லவா. அப்படி என்றால் உண்மை மறைக்கப்படுகிறதா?

9/11 தாக்குதல் போன்றா?

9/11 தாக்குதல் போன்றா?

தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி அமெரிக்காவில் தாக்குதல் நடத்தியது போன்று ஏதாவது தீவிரவாதிகள் முயற்சித்து பல்லாயிரக் கணக்கான உயிர்களை காக்க விமானி விமானத்தை இறக்கி விட்டாரா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+