"நிதி அமைச்சர்" சு.சுவாமியை மோடி பதவியேற்புக்கு கூப்பிடாங்களா இல்லையா?
டெல்லி: பிரதமர் மோடி அரசில் நிதி அமைச்சராகப் போகிறார் என்றெல்லாம் கூறப்பட்ட சுப்பிரமணியன் சுவாமியை பதவியேற்பு விழாவுக்கே கூப்பிட்டார்களா என்பதே தெரியாத அளவுக்கு அடங்கிக் கிடக்கிறார்.
ஜனதா கட்சி என்ற ஒருநபர் கட்சியை நடத்திக் கொண்டு இருந்த சுப்பிரமணியன் சுவாமி திடீரென ஒரு நாள் பாஜகவில் சேர்ந்துவிட்டார்.

ஆனால் தமிழக பாஜகவினர் அவரது இணைப்பை விரும்பவில்லை. இதனால்தான் அவரை தமிழக பாஜக தலைமை அலுவலகத்துக்கு பக்கமே தலை வைத்துப் படுக்கக் கூடாது என்று எச்சரித்து வரவிடாமல் வைத்திருந்தனர்.
கூட்டணிக்கு எதிர்ப்பு
லோக்சபா தேர்தலில் மதிமுக, தேமுதிக, பாமகவுடன் பாஜக கூட்டணி வைத்ததை மிகக் கடுமையாக விமர்சித்தார் சுப்பிரமணியன் சுவாமி.
வைகோ மீது காட்டம்
அதன் பின்னர் தேர்தலில் வைகோ தோற்ற உடன். அவரால்தான் நாங்களே தோற்றோம் என்றார் சுவாமி.
ஜெ. அரசை டிஸ்மிஸ் செய்க
அதைத் தொடர்ந்து மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளவிலையெனில் ஆட்சியையே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ட்விட்டரிப் பதிவு போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார் சுவாமி.
நிதி அமைச்சர்
இந்த நிலையில் திடீர் பரபரப்பாக சுப்பிரமணிய சுவாமிதான் மோடி அரசில் நிதி அமைச்சர் என்று கிளப்பிவிடப்பட்டது. அப்போதெல்லாம் சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் தோரணைகளும் கூட கேபினட் அமைச்சராகிவிட்டது போல துள்ளிக் குதித்ததாக இருந்தது.
ஆள் எங்கே?
ஆனால் நேற்று நடைபெற்ற மோடி அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் மனிதர் அழைக்கப்பட்டாரா? இல்லையா என்று தெரியாத அளவுக்கு பம்மிக் கிடந்தார். அவரைப் பார்த்ததாகவோ அவரைப் பற்றிய எந்த ஒரு செய்தியுமோ இடம்பெறவில்லை.
ராமர் பாலம்
அதே நேரத்தில் மோடி அரசு உட்கார்ந்த உடனேயே முதலாவதாக ராமர் பாலத்தை கலாசார சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் சு.சுவாமி.
அடங்(க்)குவார் இல்லை போல!!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications