விந்தணு மாறிடுச்சா? இப்படி நடக்குமா? விவசாயி வீட்டில் ஒரே கூட்டம்.. கரூர் போல ராஜஸ்தானிலும் வியப்பு

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: இணையத்தில் ஒரு எருமை மாடு வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த எருமை கன்றுக்குட்டிக்கு என்ன ஆச்சு? என்று இணையவாசிகள் பலரும் ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் கரவுளி அருகே உள்ளது மச்சானி என்ற கிராமம்.. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் நீரஜ் ராஜ்புத்.. இவர் ஒரு விவசாயி ஆவார். சொந்தமாக மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார்.. இந்நிலையில், கடந்த 17ம் தேதி, விடிகாலை 4 மணிக்கு, இவர் வளர்த்து வந்த எருமை மாடு ஒன்று, கன்றினை ஈன்றிருக்கிறது..

Rajasthan buffalo karur

கன்றுக்குட்டி: ஆனால், அந்த கன்றுக்குட்டி, வழக்கமான எருமை மாடு போல இல்லாமல், பால் போல வெள்ளை வெளேர் என பிறந்திருக்கிறது.. அதாவது பார்ப்பதற்கு அச்சுஅசல், வெள்ளை பசு கன்று போலவே இருக்கிறதாம்.. உடலில் ஒரு இடத்தில்கூட, புள்ளி அளவுக்குகூட கருப்பு நிறம் காணப்படவில்லையாம்.. வேறு எந்த நிறமும் கொஞ்சம்கூட இல்லாமல், முழுமையான வெண்மை நிறத்தில் கன்றுக்குட்டி ஜொலிக்கிறது.

இந்த வித்தியாசமான கன்று குட்டியை பார்ப்பதற்காக, மக்கள் கூட்டம் நீரஜ் வீட்டில் அலைமோதி கொண்டிருக்கிறது.. எருமையை ஆச்சரியமாக பார்த்த பொதுமக்கள், இது உலகின் 8வது அதிசயம் என்று சொல்லிவிட்டு சொல்கிறார்களாம்.
எருமை மாடு: இது குறித்து நீரஜ் ராஜ்புத் சொல்லும்போது, "நாட்டு இன எருமை மாடு இப்போது தான் முதன்முறையாக குட்டியை ஈன்றுள்ளது. எருமை மாடு கன்றுக்குட்டியை ஈன்றதுமே, வெள்ளை நிறத்தில் பிறந்த கன்றுக் குட்டியைப் பார்த்து நாங்கள் ஆச்சரியம் அடைந்தோம்.. இந்த கன்றுக் குட்டி பிறந்ததில் இருந்தே ஆரோக்கியமாக உள்ளது.. அதன் தாய், தன்னுடைய குட்டியை மிகவும் அரவணைத்து கவனமாக பார்த்துக் கொள்கிறது" என்கிறார்.

எனினும், இந்த எருமை மாடு இப்படி வெள்ளை கலரில் பிறந்திருக்க என்ன காரணம் என்று தெரியவில்லை.. இது சில விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது.. உரிமையாளர் சொல்கிறார்..

மரபணு கோளாறு: இதுகுறித்து கால்நடை மருத்துவர் பிரம்ம பிரகாஷ் பாண்டே சொல்லும்போது, அல்பினிசம் என்ற மரபணு கோளாறு காரணமாக இப்படி எருமை கன்றுக் குட்டி பிறந்திருக்கலாம்.. பொதுவாக கண்கள், முடி மற்றும் தோலில் ஒரு சில இடங்களில்தான் இந்த மரபணு கோளாறு பிரதிபலிக்கும்.. ஆனால் உடல் முழுவதும் முற்றிலும் நிறமற்றதாக இருப்பது மிகவும் அரிதானது" என்கிறார்.

இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு நம்முடைய கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள சேமங்கி என்ற பகுதியிலும், ஒரு சம்பவம் நடந்தது.. விவசாயி முருகேசன் என்பவர் வீட்டு எருமைமாடு, கன்றுக்குட்டியை ஈன்றபோதும், அந்த கன்றுக்குட்டி முழுக்க முழுக்க வெள்ளை கலரில் இருந்துள்ளது... இந்த வெள்ளை கலர் குட்டியை பார்ப்பதற்காக, மக்கள் வந்தவண்ணம் இருந்ததால், முருகேசன் வீட்டில் எப்பவுமே திருவிழா போல கூட்டம் காட்சியளித்தது.

வெளிநாட்டு ஊசி: சினை பிடிப்பதற்காக போடப்படும் ஊசி வெளிநாடுகளில் இருந்துதான் தருவிக்கப்படுகிறதாம்.. அப்படி வந்த ஊசியில், வெளிநாடுகளில் உள்ள கலப்பின மாடுகளில் இருந்து பெறப்பட்ட விந்தணு கலந்து வந்திருக்கலாம் என்று இதற்கு காரணம் சொல்லப்பட்டது.

ஆனால், எருமைக்கு தோலில் மெலனின் குறைபாடு உள்ளதால்தான் இப்படி வெள்ளையாக பிறந்திருக்கும் என்று மருத்துவ காரணமும் சொல்லப்படுகிறது..

குழப்பம்: அதாவது, இதுபோன்ற உயிரினங்களுக்கு உடம்பில் மெலனின் சுரக்காவிட்டால், இப்படி வெள்ளை கலரில் நிறம் மாறுமாம், அதுவும், 10,000 உயிரினங்களில் ஒரு உயிரினம்தான் இப்படி பிறக்கும் என்கிறார்கள். இப்படி 2 விதமான காரணங்கள் முருகேசன் வீட்டு எருமை மாட்டுக்கு சொல்லப்பட்ட நிலையில், ராஜஸ்தான் எருமை கன்றுக்குட்டி நிறத்துக்கு காரணம் உறுதியாகவில்லை.. ஆனால், இந்த கன்றுக்குட்டி வெள்ளை வெளேரென பிறந்ததிலிருந்தே, அதன் ஓனர் நீரஜ் ராஜ்புத் ரொம்பவே குழம்பி போயிருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+