Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாலைவன புயலாக வெறும் 26 வயது ராஜ்புத் இளைஞர் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளரான மத்திய அமைச்சர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளருக்கு சிம்ம சொப்பணமாக மாறி உள்ளார். ராஜஸ்தானில் தற்போது ‛டாக் ஆப் தி டவுன்’ ஆக மாறி உள்ள இந்த ரவீந்திர பதி யார்? பின்னணி பற்றிய விபரம் வருமாறு:

அரசியல்.. ஒற்றை வார்த்தையில் கூற வேண்டுமானால் கணிக்க முடியாதது. ஏனென்றால் இங்கு தான் சாதாரண மனிதன் ஒரே நாளில் உச்சம் தொடுவது, பிரதமர், முதல்வர், அமைச்சர் என உச்ச பதவிகளில் இருப்போர் எதிர்பாராத தோல்வியால் நாளடைவில் இருக்கும் இடம் தெரியாமல் போவதும் இந்த அரசியலில் மட்டும் தான் சாத்தியம்.

Who is 26 year old Ravindra Bhati Why he contest as a independent candidate at Barmer in Rajasthan

அந்த வகையில் தான் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு புரட்சி எழுந்துள்ளது. அதாவது ராஜஸ்தானின் முக்கிய நகரமான பார்மரில் இருந்த 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சோஹ்தான். வெப்பம் நிறைந்த இந்த பகுதியில் மதிய வேளையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவது இல்லை.

26 வயது இளைஞர்: ஆனால் இப்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோ எடுக்கப்பட்ட இடும் சோஹ்தான். அதாவது மதியம் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதும், அந்த பகுதியில் உள்ள கட்டடங்களின் மேற்கூரைகளில் பொதுமக்கள் கூட்டமாக நிற்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் மேளம், தாளம் கொட்ட அங்கிருந்தவர்கள் கடும் வெயிலை கவனிக்காமல் உற்சாக மிகுதியில் ஆர்ப்பரிக்கின்றனர்.

இந்த பகுதி மக்களின் இந்த ஆர்ப்பரிப்புக்கு காரணமானவர் தான் ரவீந்திரா பதி. வெறும் 26 வயது தானே இளைஞர். வயது குறைவு என்றாலும் கூட மிகப்பெரிய அரசியல் தலைவராக உருவாகும் நோக்கத்தில் வலம் வருகிறார் இந்த ரவீந்திரா பதி. ராஜ்புத் சமுதாயத்தை சேர்ந்த இவர் தான் ராஜஸ்தானில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு சிம்ம சொப்பணமாக மாற தொடங்கி உள்ளார்.

யார் இவர்: ரவீந்திர பதி கடந்த 2019ல் ஜோத்ரூயில் உள்ள ஜெய் நரைன் வியாஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பு தேர்தலில் போட்டியிட்டு தலைவரானார். இந்த தேர்தலில் பாஜகவின் ஏபிவிபி அமைப்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் வாய்ப்பு கிடைக்காத நிலையில் சுயேச்சையாக களமிறங்கி வாகை சூடினார். அதன்பிறகு பாஜகவில் இணைந்து செயல்பட தொடங்கினார்.


கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலின்போது ரவீந்திரா பதி, ராஜஸ்தான் மாநிலம் பர்மீர் மாவட்டம் ஷியோ தொகுதியில் பாஜகவில் சீட் கேட்டார். ஆனால் பாஜக மேலிடம் வழங்க மறுத்தது. இதையடுத்து கட்சியை விட்டு வெளியேறிய ரவீந்திரா பதி சுயேச்சையாக போட்டியிட்டார். அவர் அந்த தொகுதியில் போட்டியிட்டபோது, ‛‛இளம் ரத்தம்.. அதனால் தான் கொதிக்கிறது. அரசியலில் எங்களை மீறி வெற்றி பெற்று வளர்ந்து விட முடியுமா’’ என்று தான் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பேசினர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ரவீந்திரா பதி அந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

ராஜ்புத் சமுதாயம்: அதாவது ஷியோ சட்டசபை தொகுதியில் ரவீந்திர பதி 79,495 ஓட்டுகள் பெற்று 3,950 ஓட்டுகள் வித்தியாசத்தில் இன்னொரு சுயேச்சை வேட்பாளர் பாதி கானை வீழ்த்தினார். மாறாக ரவீந்திர பதிக்கு கட்டம் கட்ட முயன்ற காங்கிரஸ் வேட்பாளர் அமீன் கான் 55,264 ஓட்டுகளும், பாஜகவினர் ஸ்வரூப் சிங் 22,820 ஓட்டுகளும் பெற்று 3வது மற்றும் 4வது இடத்தை பிடித்தனர். இந்த தேர்தலை தொடர்ந்து தான் ரவீந்திர பதிக்கு ராஜஸ்தானில் மாஸ் அதிகரித்தது.

ராஜஸ்தானில் இளம் அரசியல் வாதியாக அறியப்படும் காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட்டுக்கு நிகராக ராஜ்புத் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பேசி வருகின்றனர். தற்போது பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் ராஜ்புத் சமுதாயத்தினர் எடுத்துள்ள நிலையில் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த ரவீந்திர பதி முடிவு செய்துள்ளார். அதன்படி ராஜஸ்தானில் வரும் 26ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ரவீந்திர பதி சுயேச்சையாக களமிறங்கி உள்ளார்.

லோக்சபா தேர்தலில் போட்டி: பர்மீர் லோக்சபா தொகுதியில் ரவீந்திர பதி சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். அவருக்கு ஆப்பிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரியும், காங்கிரஸ் சார்பில் உம்மேதா ராம் பென்னிவால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் 2 பேரும் ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவர். பர்மீர் தொகுதியில் ஜாட் சமுதாயத்தினர் அதிகமாக இருந்தாலும் கூட வரும் லோக்சபா தேர்தலில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓட்டுகளை பிரிக்க உள்ளனர். இதனால் ராஜ்புத் மற்றும் இளைஞர்களின் ஆதரவில் வெற்றி பெறலாம் என ரவீந்திர பதி திட்டமிட்டு களமிறங்கி உள்ளார்.

இந்நிலையில் தான் தற்போது பர்மீர் லோக்சபா தொகுதியில் ரவீந்திர பதிக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது. மேலும் தொகுதியின் தற்போதைய சிட்டிங் எம்பியும், மத்திய அமைச்சருமான கைலாஷ் சவுத்ரி மீது கடும் அதிருப்தி உள்ளது. அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் உம்மேதா ராம் பென்னிவாலுக்கும் தொகுதியில் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பு இருக்கிறதா? என்றால் அப்படி எதுவும் இல்லை. இதனால் பர்மீர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளார் இந்த 26 வயது ரவீந்திர பதி.

வெற்றி என நம்பிக்கை: இதுபற்றி ரவீந்திர பதி கூறுகையில், ‛‛நான் எந்த அரசியல் பின்புலத்திலும் இருந்து வரவில்லை. எனக்கு அரசியலில் குருநாதர் யாரும் இல்லை. என் தந்தை பள்ளி ஆசிரியர். தாய் எங்களின் வீட்டை கவனிக்கிறார். வெறுங் கையால் அரசியலுக்கு வந்ததால் எனக்கு எந்த கட்சியிலும் போட்டியிட டிக்கெட் கிடைக்கவில்லை. நான் சாதாரண மனிதன். என்னை சச்சின் பைலட்டுடன் ஒப்பிட வேண்டாம். அவருக்கு அரசியல் அனுபவம் அதிகம். வரும் லோக்சபா தேர்தலிலும் நான் வெற்றி பெறுவேன். பண்டித் ஒருவர் எனது எதிர்காலத்தை கணித்தார். அப்போது அவர் கட்சி இன்றி தான் தேர்தலில் போட்டியிடுவாய் என்று கணித்தார். அதன்படியே நடந்து வருகிறது. மக்களின் முடிவு எனக்கு சாதகமாக இருக்கும்’’ என்றார்.

தொகுதி நிலவரம்: பர்மீர் லோக்சபா தொகுதியை பொறுத்தமட்டில் மொத்தம் 22 லட்சம் ஓட்டுகள் உள்ளன. இதில் ஜாட் சமுதாய மக்களின் ஓட்டுகள் 4.5 லட்சமாகவும், எஸ்சி - எஸ்டி சமுதாய மக்களின் ஓட்டுகள் 4 லட்சமாகும், ராஜ்புத் சமுதாய மக்களின் ஓட்டுகள் 3 லட்சமாகுகவும், இஸ்லாமியர்களின் ஓட்டுகள் 2.7 லட்சமாகவும், ஓபிசி பிரிவினரின் ஓட்டுகள் 6.6 லட்சமாகும் உள்ளது. இதில் 6 லட்சம் ஓட்டுகளை பெறும் நோக்கத்தில் ரவீந்திர பதி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த பர்மீர் லோக்சபா தொகதி என்பது கடந்த 1964 முதல் 1999 வரை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் 1977, 1989 தேர்தல்களில் மட்டுமே காங்கிரஸ் தோற்றது. அதன்பிறகு 2004ல் முதல் முறையாக பாஜக வெற்றி பெற்றது. அதன்பிறகு 2009ல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து 2014, 2019 தேர்தல்களில் பாஜகவின் கைலாஷ் சவுத்ரி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது அவரே 3வது முறையாக களமிறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+