Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெடிகுண்டு வழக்கு முதல் சிஎம் பதவி வரை.. ஜார்க்கண்ட்டில் கலகம் செய்யும் சம்பாய் சோரன்! யார் இவர்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இப்போது திடீர் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கே ஜேஎம்எம் கட்சித் தலைமைக்கு எதிராகச் சம்பாய் சோரன் கலகம் செய்துள்ளார். அங்கே இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்கும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த கலகத்தைச் செய்த சம்பாய் சோரன் யார்.. அவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

மூத்த ஜேஎம்எம் தலைவர் சம்பாய் சோரன் இப்போது கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி இருக்கிறார். கட்சித் தலைமை தன்னை அவமானப்படுத்தியதாகப் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் சம்பாய் சோரன் தனக்கு இப்போது 3 ஆப்ஷன்கள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

Jharkhand hemant soren politics

அதாவது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது, புதிய கட்சியைத் தொடங்குவது அல்லது வேறு கட்சியில் சேருவது ஆகிய 3 ஆப்ஷன்கள் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். சம்பாய் சோரன் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பாய் சோரன்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் தான் அங்கே திடீர் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜார்க்கண்டை பொறுத்தவரை ஹேமந்த் சோரன் கடந்த பிப். மாதம் நிலமோசடி வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். இதையடுத்து சம்பாய் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். சுமார் 5 மாதங்கள் அவர் முதல்வராக இருந்த நிலையில், ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் இறுதியில் ஜாமீன் கிடைத்தது. இதனால் சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தது.

இதுவே இப்போது அங்கே அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பாய் சோரன் முதல்வர் பதவியில் இருந்து விலகினாலும் அப்போது நடந்த சில சம்பவங்களால் அவர் உடைந்து போய் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரே கூட தனது ட்விட்டரில் விரிவான பதிவைப் பதிவிட்டிருந்தார். பல ஆண்டுகளாக அவர் ஜேஎம்எம் கட்சியில் இருக்கும் நிலையில், தன்னை நடத்திய விதம் அவமானப்படுத்துவது போல இருந்ததாக அவர் குற்றஞ்சாட்டி இருந்தார்.

நிராகரிப்பு: சம்பாய் சோரனின் இந்த குற்றச்சாட்டை முதல்வர் ஹேமந்த் முழுமையாக நிராகரித்தார். பாஜக தனது எம்எல்ஏக்களை தன்வசம் இழுக்க முயல்வதாகவும் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். ஜார்க்கண்ட் தனி மாநில கோரிக்கை இருந்த போது முன்னின்று நடத்தியவருமான ஜேஎம்எம் கட்சியை நிறுவிய ஷிபு சோரனின் நெருங்கிய உதவியாளர் தான் சம்பாய் சோரன்.. இப்போது தனது குரு ஷிபு சோரனின் மகனான ஹேமந்த் சோரனுக்கு எதிராகவே கலகம் செய்துள்ளார். யார் இந்த சம்பாய் சோரன்.. அவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

யார் இவர்: சரைகேலா- கர்சவான் மாவட்டத்தில் உள்ள ஜிலிங்ககோடா கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான் சம்பாய் சோரன்.. வறுமையில் வாடிய சம்பாய் சோரன் இளம் வயதிலேயே தனி ஜார்கண்ட் இயக்கத்தில் ஆர்வம் கொண்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டார்.. அவரை பற்றி ஜேஎம்எம் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "சம்பாய் சோரன் எப்போதும் மக்களின் அரசியல்வாதி.. அவர் ஆதிவாசிகளின் நலனில் அக்கறை கொண்டவராக இருந்தார். அவரால் 10ம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை.. தனி ஜார்கண்ட் இயக்கத்தில் அவர் மிகத் தீவிரமாக இருந்ததே அதற்குக் காரணமாகும்" என்றார்.

1970களில் தான் தனி ஜார்கண்ட் இயக்கம் வேகம் பெற்றது. 1973இல் ஜேஎம்எம் கட்சி உருவாக்கப்பட்டது.. சம்பாய் சோரனின் செயல்பாடுகள் அனைவரையும் வியக்க வைத்த நிலையில், அவரது கட்சியினர் "கொல்ஹான் புலி" என்றே அவரை குறிப்பிட்டனர். 1990களில் ஒருமுறை, அமைப்புசாரா தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் தொழிற்சாலை முன்பு அவர் நடத்திய பிரம்மாண்ட போராட்டம் பலரையும் கவனிக்க வைத்தது.

வெடிகுண்டு வழக்கு: 1993ல் அவர் மீது வெடிபொருட்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ரயில்வேக்கு சொந்தமான சொத்துகளை அழிக்கக் குண்டு வைக்க முயன்றதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அது பொய்யான வழக்கு என்றும் தனி ஜார்க்கண்ட் கோரிக்கை இருந்த காலத்தில் தங்களை காலி செய்ய இதுபோன்ற வழக்குகளைப் போட்டதாகச் சம்பாய் சோரன் சமீபத்தில் கூறியிருந்தார்.

தேர்தல் அரசியல்: அதைத் தொடர்ந்து 1995இல் சம்பாய் சோரன் தனது தேர்தல் அரசியலில் நுழைந்தார். முதலில் சரைகேலா சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்றார். அடுத்த தேர்தலில் அவர் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இருப்பினும், அடுத்த நான்கு தேர்தல்களிலும் அவர் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக அடுத்தடுத்து வென்ற போதிலும் சரைகேலா தொகுதியில் சம்பாய் சோரனை வீழ்த்தவே முடியவில்லை மக்கள் எளிதாக அணுகும் தலைவரா சம்பாய் சோரன் இருந்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இந்தாண்டு இறுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், சம்பாய் சோரன் இந்த நேரத்தில் கலகம் செய்துள்ளது அங்கு பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் தேர்தலில் ஜேஎம்எம் கட்சி பழங்குடியினர் வாக்குகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+