கன்னட அமைப்புகளை பற்றி கவலைப்படாமல் காலா ரிலீசுக்கு தேதி குறித்த கனகபுரா சீனிவாஸ்! யார் இவர்?
Recommended Video

பெங்களூர்: காலா திரைப்படத்தை கர்நாடகாவில், 130 தியேட்டர்களில் ரிலீஸ் செய்வேன் என்று தில்லாக அறிவித்துள்ளார் பிரபல வினியோகஸ்தர் சீனிவாஸ்.
கனகபுரா சீனிவாஸ் என்று ஊர் பெயரையும் சேர்த்து சொன்னால் கர்நாடகாவிலுள்ள குழந்தைகளுக்கும் இவரை பற்றி தெரியும். அந்த அளவுக்கு சினிமா துறையில், பிரபலமானவர் கனகபுரா சீனிவாஸ்.
ராம்நகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்த இவர், எந்த சர்ச்சைகள் வந்தாலும், திரைப்படத்தை ரிலீஸ் செய்வதில் கவனமாக இருக்க கூடியவர். இப்படித்தான் பாகுபலி 2 திரைப்படம் வெளியான நேரத்திலும் கன்னட அமைப்பினர் பிரச்சினை செய்தனர்.

பாகுபலி 2 பிரச்சினை
படத்தில் நடித்திருந்த சத்தியராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும், அல்லது, பாகுபலி 2 படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று எச்சரித்தனர். இந்த படத்தையும் கனகபுரா சீனிவாஸ்தான் கர்நாடகாவில் வினியோகம் செய்தார்.

ஜாதி ஆதரவு இல்லை
ஜாதிக்கு தனி செல்வாக்குகளை கொண்டிருக்கும் கர்நாடகாவில், இத்தனைக்கும் பெரிய அளவுக்கான ஜாதி பலம் இல்லாதவர்தான் கனகபுரா சீனிவாஸ். சிறு அளவிலான சமூகமாக உள்ள 'கொல்ரு' என்ற ஜாதி பிரிவை சேர்ந்தவர் இவர். இருப்பினும் கன்னட அமைப்பினரின் எச்சரிக்கையை மீறி காலா திரைப்படத்தை, 130 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய தயார் என அறிவித்துள்ளார் கனகபுரா சீனிவாஸ்.

ஹைகோர்ட் ஆதரவு
காலா திரைப்படத்தை காண்பிக்கும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை என்று, அம்மாநில ஹைகோர்ட் நேற்று உத்தரவிட்ட நிலையில், துணிந்து களமிறங்குகிறார், கனகபுரா சீனிவாஸ்.

பின்வாங்கிய நிறுவனம்
ஏற்கனவே காலா படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த வினியோக நிறுவனம் கொல்டி ஃப்லிம்ஸ், கன்னட அமைப்பினர் எச்சரிக்கையால் தங்கள் முடிவை வாபஸ் பெற்ற நிலையில், துணிச்சலாக இந்த முடிவை எடுத்துள்ளார் கனகபுரா சீனிவாஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications