‛‛யோகியை விட முக்கியத்துவம்’’.. வேட்புமனு தாக்கலில் பிரதமர் மோடிக்கு அருகே சீட்.. யார் இந்த தமிழர்?
வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடி தான் போட்டியிடும் வாரணாசி லோக்சபா தொகுதியில் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். இந்த வேளையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தே பின்வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் பிரதமர் மோடி அருகே இன்னொருவர் அமர்ந்திருந்தார். அவர் யார்? யோகி ஆதித்யநாத்தை விட பிரதமர் மோடி அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? தமிழகத்துக்கும், அந்த நபருக்கும் இடையேயான தொடர்பு என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதி எம்பியாக பிரதமர் மோடி உள்ளார். கடந்த 2014, 2019 ஆகிய தேர்தல்களில் பிரதமர் மோடி இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 3வது முறையாக பிரதமர் மோடி வாரணாசியில் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதி கடந்த 1991 முதல் பாஜகவின் கோட்டையாக உள்ளது. இதில் 2004 தேர்தலில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.
கடந்த 2014 தேர்தலில் பிரதமர் மோடி 3.72 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன்பிறகு கடந்த 2019ல் 4.8 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி வாரணாசியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் போட்டியிடுகிறார். பகுஜன் சமாஜ் சார்பில் அதார் அலி லாரி களமிறங்கி உள்ளார்.
‛‛இறங்கி வந்த கங்கா.. கூடிய நல்ல நேரம்’’.. காலை 11.40க்கு வேட்புமனுதாக்கல் ஏன்? மோடியின் சாஸ்திரம்
இந்நிலையில் தான் வாரணாசி கலெக்டர் அலுவலகத்தில் இன்று பிரதமர் மோடி வேட்புமனுத்தாக்கல் செய்தார். காலை 11.40 மணிக்கு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்த அறையில் அவருடன் முன்இருக்கையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பின்வரிசையில் அமர்ந்திருந்தார். பிரதமர் மோடி அருகே இன்னொருவர் அமர்ந்திருந்தார். இதனால் யோகி ஆதித்யநாத்தை விட அந்த நபர் அதிக கவனம் பெற்றார். அந்த நபர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றி பலரும் விவாதிக்க தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் அந்த நபரின் பெயர் பண்டித் ஞானேஸ்வர் சாஸ்திரி என்பது தெரியவந்துள்ளது. இவர் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கானவர். இவர் தான் அயோத்தி ராமர் கோவில் பிரதான் பிரதிஷ்டை சடங்குகளை மேற்பார்வை செய்து நடத்தினார். பண்டித் ஞானேஸ்வர் சாஸ்திரி தற்போது காசியில் வசித்த வருகிறார். இவருக்கு வயது 66 ஆகிறது.

இவரது முன்னோர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் கிராமம் தான் அவரது முன்னோர்களின் சொந்த ஊராகும். இங்கிருந்து அவரது முன்னோர்கள் 19ம் நூற்றாண்டில் காசிக் குடிபெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிரதமர் மோடி தாஸ்வாமேத் காட்டில் கங்கை நதியில் ஸ்நானம் செய்து கங்கா பூஜை செய்தார். அதன்பிறகு வாரணாசியில் உள்ள கால பைரவா கோவிலில் பூஜை செய்து தரிசித்தார். அதன்பிறகு தான் பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி காலை 11.40 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications