‛‛இறங்கி வந்த கங்கா.. கூடிய நல்ல நேரம்’’.. காலை 11.40க்கு வேட்புமனுதாக்கல் ஏன்? மோடியின் சாஸ்திரம்
வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடி தான் போட்டியிடும் வாரணாசி லோக்சபா தொகுதியில் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வேட்புமனுவை பிரதமர் மோடி காலை 11.40 மணிக்கு செய்தார். இந்நிலையில் தான் வேட்புமனுத்தாக்கலுக்கு பிரதமர் மோடி ஏன் காலை 11.40 மணியை தேர்வு செய்தார்? என்பது பற்றியும், அதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு இப்போது 3வது முயைாக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் களமிறங்கி உள்ளார்.

இந்த தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் முறையில் பிரதமராகும் முனைப்பில் பிரதமர் மோடி உள்ளார். இந்த வாரணாசி தொகுதிக்கு ஜுன் 1ம் தேதி (கடைசி கட்ட லோக்சபா தேர்தல்) லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் வாரணாசியில் தேர்தல் வேட்புமனு தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று வாரணாசியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். தாஸ்வாமேத் காட்டில் கங்கை நதியில் ஸ்நானம் செய்து கங்கா பூஜை செய்தார். அதன்பிறகு வாரணாசியில் உள்ள கால பைரவா கோவிலில் பூஜை செய்து தரிசித்தார். அதன்பிறகு தான் பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி காலை 11.40 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இந்த நேரம் தான் தற்போது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்! முன்மொழிந்த 4 பேர் யார் தெரியுமா
மே மாதம் 14ம் தேதியை வேட்புமனுத்தாக்கலுக்கு பிரதமர் மோடி முதலிலேயே தேர்வு செய்தார். ஏனென்றால் இது கங்கா சப்தமி தினமாகும். இந்த நாளில் கடவுள் கங்கா நேரடியாக பூமிக்கு வருவதாக நம்பப்படுகிறது. இது இந்துக்களை பொறுத்தமட்டில் நல்ல நாளாக பார்க்கப்படுகிறது. மேலும் இன்னொரு சிறப்பு என்றால் கங்கா சப்தமி தினத்தில் புஷ்ய நட்சத்திரம் ஒன்றாக இணைகிறது. இதனால் இந்த நாள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
அதாவது இன்று புஷ்ய நட்சத்திரம் என்பது காலை 11.23 மணி முதல் 1.05 மணி வரை இருக்கும். இது இந்துக்கள் நம்பிக்கையில் மிகவும் நல்ல நேரமாகும். இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை செய்வது வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நேரம் என்பது அபிஜித் முகூர்த்தம் மற்றும் ஆனந்த் யோக் ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது. அதனால் இதற்கிடையே தான் இன்றைய தினம் 11.40 மணிக்கு மனுத்தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications