வி.ஐ.பி. சிறையில் சுதாகரன்: நிச்சயித்த மாப்பிள்ளையை கொன்ற சுபா அறையில் சசி, இளவரசி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பரப்பன அக்ரஹாராவில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட சாப்ட்வேர் என்ஜினியர் மாப்பிள்ளையை திட்டம்போட்டு கொலை செய்த சுபா இருக்கும் அறையில் சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா

ஜெயலலிதா

இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள வி.வி.ஐ.பி. அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சுதாகரன்

சுதாகரன்

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரன் சிறையில் உள்ள வி.ஐ.பி. அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சசி, இளவரசி

சசி, இளவரசி

சசிகலாவும், இளவரசியும் சுபா சங்கரநாராயணன் என்ற ஆயுள் தண்டனை கைதி இருக்கும் அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சுபா?

சுபா?

கடந்த 2003ம் ஆண்டில் பெங்களூரில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து வந்தவர் வழக்கறிஞரின் மகளான சுபா சங்கரநாராயணன். அவருக்கு அவரது பெற்றோர் இன்டெல் நிறுவனத்தில் பணிபுரிந்த கிரிஷ் என்னும் சாப்ட்வேர் என்ஜினியருடன் திருமணம் நிச்சயம் செய்தனர்.

திட்டமிட்ட கொலை

திட்டமிட்ட கொலை

சுபா தனக்கு நிச்சயம் நடந்த 4வது நாள் கிரிஷை வெளியே அழைத்துச் சென்றார். கிரிஷை சுபாவின் காதலர் அருண் உள்ளிட்ட 3 பேர் கொலை செய்தனர். இந்த வழக்கில் கைதான சுபாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+