அம்பானி, அதானி இல்லை.. ராமர் கோயிலுக்கு அதிக நிதி கொடுத்தவர் யார் தெரியுமா.. எவ்வளவு நன்கொடை தந்தார்
டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா வெகு சிறப்பாக நடைபெற்ற நிலையில், இந்த ராமர் கோயில் கட்டுமானத்திற்கு அதிக நன்கொடை அளித்தவர் யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ராமர் சிலைக்குச் சிறப்புப் பூஜைகளைச் செய்தார். இதில் பிரதமர் மோடி தொடங்கிப் பல முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பல்வேறு தரப்பினரிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டே இந்த அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டது. நாடு முழுக்க இருந்து பலரும் நன்கொடை அளித்த நிலையில், அதை வைத்தே கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நன்கொடை: இந்த ராமர் கோயில் கட்டுமானத்திற்குப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் நன்கொடை அளித்துள்ளனர். கோயில் கட்டுமானப் பணிகளை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கவனித்து வந்தன. இந்த ராமர் கோயில் கட்டுமானத்திற்கு நாடு முழுக்க இருந்து நன்கொடைகள் பெறப்பட்டு இருந்தன. மேலும், கோயில் கட்டுமானத்திற்கு 1,100 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.
அதிக நன்கொடை அளித்தவர் யார்: இதுவரை அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அதிக நன்கொடை அளித்தவர் யார் தெரியுமா? அவர் பெயர் தான் மொராரி பாபு, குஜராத்தைச் சேர்ந்த ஆன்மீகத் தலைவரான மொராரி பாபு என்பவர் தான் இந்த ராமர் கோயில் கட்டுமானத்திற்கு அதிக நன்கொடை அளித்திருந்தார். இவர் ராமாயணத்தைக் கடந்த 60 ஆண்டுகளாக நாடு முழுக்க பரப்பி வந்துள்ளார்.
இதுவரை ராமர் கோயில் கட்டுமானத்திற்கு மெராரி பாபு 18.6 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். இந்த நிதியில் ரூ.11.30 கோடி இந்தியாவில் இருந்தும், ரூ.3.21 கோடி இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிலிருந்தும், ரூ.4.10 கோடி அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் திரட்டப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 2020இல் குஜராத்தின் பித்தோரியாவில் நடந்த நிகழ்வில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு நிதி தருமாறு மொராரி பாபு அழைப்பு விடுத்த நிலையில், அதன் பிறகு நன்கொடை குவிந்தன.
மொராரி பாபு: இது குறித்து மொராரி பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏற்கனவே ரூ.11.3 கோடி நன்கொடை வசூலித்த அதை 15 நாட்களுக்குள் ராம் ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளோம். வெளிநாடுகளில் இருந்து வசூலித்த மீதமுள்ள தொகைக்குத் தேவையான அனுமதி சான்றிதழ் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்த தொகையும் ராம ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு வழங்கப்படும். இதுவரை மொத்தம் ரூ.18.6 கோடி நன்கொடை வழங்கியுள்ளோம்" என்று கூறப்பட்டுள்ளது.
தனது வாழ்நாள் முழுக்க ராமர் புகழைப் பரப்புவதை அவர் சேவையாகச் செய்து வருகிறார். ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து அவர் கூறுகையில், "ராமர் கோவில் திறப்பு விழாவை நினைத்தாலே மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
தனது 14 வயதிலேயே ராம் மொராரி பாபு ஆன்மீகத்தில் ஈடுபடத் தொடங்கினார். 1976ஆம் ஆண்டு பல ஆண்டுகளாக, கென்யாவின் நைரோபியில் அவர் ஆன்மீக நிகழ்வுகளை நடத்தி வந்தார். அங்கே ஆன்மீக புகழை அவர் பரப்பி வந்தார். அதன் பிறகு இந்தியா வந்த பிறகும் தொடர்ந்து ராமர் புகழை அவர் பரப்பி வருகிறார்.. இந்த மொராரி பாபு தான் ராமர் கோயில் கட்டுமானத்திற்கும் அதிக நன்கொடை கொடுத்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications