"இமாலய ஆதரவு.." அசோக் கெலாட் vs வசுந்தரா ராஜே! ராஜஸ்தான் சிறந்த முதல்வர் வேட்பாளர் யார்.. புது சர்வே
ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கே சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் இணைந்து நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது. அங்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குத் தேர்தல் ஜுரம் ஆரம்பித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வரும் நவ. 25ஆம் தேதி அங்கே தேர்தல் நடைபெறும் நிலையில், டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அங்குக் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடியாகப் போட்டி இருப்பதால், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் எனப் போராடும் நிலையில், மறுபுறம் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கப் போராடுகிறது.
ராஜஸ்தான் தேர்தல் குறித்து கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில் பெரும்பாலான சர்வேக்களில் கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஆளும் கட்சிக்கு எதிரான போக்கை சமாளிப்பது பெரும் பிரச்சினையாக இருக்கும். அதேநேரம் அசோக் கெலாட் மீது மக்களுக்கு மரியாதை இருப்பது காங்கிரஸ் கட்சிக்குச் சாதமாக இருக்கிறது.
இதற்கிடையே ராஜஸ்தானில் சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஏபிபி- சி வோட்டர் இணைந்து நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் ராஜஸ்தானில், தற்போதைய முதல்வர் அசோக் கெலாட் டாப்பில் வந்துள்ளார். 34 சதவீத ஆதரவுடன் முதல்வர் வேட்பாளர் ரேஸில் அவர் முன்னிலையில் இருக்கிறார்.
அதேபோல பாஜகவின் வசுந்தரா ராஜே 22 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். காங்கிரஸ் இளம் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் 18 சதவீதத்துடன் 3வது இடத்திலும் இருக்கிறார். பாஜகவின் கஜேந்திர சிங் ஷெகாவத் 10 சதவீத ஆதரவு மற்றும் பாஜகவின் ராஜவர்தன் சிங் ரத்தோர் 7 சதவீத ஆதரவுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications