சுக்கு சுக்கா போன இதயம்.. அரைநிர்வாண கோலத்தில்.. ரத்தப்போக்குடன் கெஞ்சியலைந்த பெண்.. என்ன ஜென்மங்களோ
போபால்: "மனிதம்" செத்தே விட்டது போலும்.. ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.. இதை பார்ப்பவர்கள் பதறிப்போய் துடிக்கிறார்கள்.. யார் இந்த 12 வயது பரிதாப குழந்தை?
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் இப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளது.. உஜ்ஜைனியிலிருந்து கிட்டத்தட்ட 15 கிமீ தொலைவில், பொதுவெளியில், நட்டநடுரோட்டில், இந்த பகீர் நடந்துள்ளது.

அந்த சிறுமிக்கு 12 வயது இருக்கும்.. பட்நகர் சாலையில் இந்த சிறுமியை வெறிபிடித்து மனிதகும்பல் பலாத்காரம் செய்துள்ளது.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இந்த சிறுமி, அங்கேயே மயக்கம்போட்டு விழுந்துள்ளார்..
சிறுமி மயங்கியதுமே, அந்த கும்பல் அந்த ரோட்டிலேயே சிறுமியை வீசிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.. மயக்கம் தெளியும்வரை சிறுமி ரோட்டிலேயே விழுந்து கிடந்திருக்கிறாள்.
ரத்தப்போக்கு: சிறிது நேரம்கழித்து, மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்த்தால், அரைநிர்வாண கோலத்தில் இருப்பதை கண்டாள்.. வன்கொடுமை செய்யப்பட்டதில், நிறைய ரத்தப்போக்கும் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.. இதனால், என்ன செய்வதென்றே தெரியாமல், அந்த சிறுமி வீடு வீடாக சென்று உதவி கேட்டாள்.. யாருமே உதவவில்லை.. அதுமட்டுமல்ல, அவளது உடலில் ரத்தத்தை பார்த்ததுமே, வெறுப்பையும், கோபத்தையும் உமிழ்ந்துவிட்டு சென்றனர்..
ஒரு நபரிடம் உதவி கேட்க சிறுமி முயன்றபோது, அந்த கொடூரனோ, ஈவிரக்கமில்லாமல் சிறுமியை கோபத்துடன் விரட்டியடித்தான்.. எந்த ஆதரவுமே கிடைக்காத நிலையல், கடைசியாக ஒரு ஆசிரமத்திற்குள் நுழைந்தாள் சிறுமி.. அங்கேயிருந்த சாமியார் சிறுமியின் கோலத்தை பார்த்ததுமே அதிர்ச்சியடைந்தார்..
துணி: யாரோ பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டு, உடனடியாக அந்த சிறுமிக்கு ஒரு துணியை போர்த்தி உடம்பை மறைத்தார்.. பிறகு, அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.. டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்துவிட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை உறுதி செய்தனர்.
ஆனால், உடம்பெல்லாம் காயங்கள் அதிகமாக இருந்ததால், அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்கள்.. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக இந்தூர் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்தார்கள்.. உடனடியாக ரத்தம் செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை சொன்னதால், சிறுமியை பாதுகாப்புக்காக அழைத்து சென்ற போலீசாரே ரத்தம் தந்து சிறுமிக்கு உதவினார்கள்.. இதையடுத்து, சிறுமிக்கு சிகிச்சை ஆரம்பமானது..
சிறுமி பெயர்: இதுகுறித்து போலீசாருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.. போலீசார் விரைந்து வந்து சிறுமியிடம் பேச முயன்றனர்.. ஆனால், சிறுமியால் தன்னுடைய பெயரைகூட சரியாக சொல்ல முடியவில்லை. உடல்நிலையும் மனநிலைமையும் மிக மோசமாக இருந்தது.. அதனால், சிறுமியின் பெயர், அங்கே வசிக்கிறார் என்ற விவரங்களை உடனடியாக பெற முடியவில்லை.. அவரை சீரழித்தவர்கள் யார் என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை..
எனினும் சிறுமியின் உச்சரிப்பு வைத்து பார்த்ததில், அநேகமாக உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சந்தேகப்படுகிறார்கள்.
இப்போதைக்கு, பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும், இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாம்.. குற்றவாளிகள் குறித்து ஏதாவது தகவல் தெரிந்தால் போலீசுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் பொதுமக்களை போலீசார் கேட்டக் கொண்டுள்ளார்.
ராமராஜ்ஜியம்: வடமாநிலங்களில் நாளுக்கு நாள் இந்த அக்கிரமங்கள், அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன.. பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.. பெண் குழந்தைகள் மீதான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் எவ்வளவுதான் விமர்சித்தாலும்கூட, பெண்களின் மீதான தாக்குதல்கள் பெருகியே வருகிறது. அதிலும், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள்.
வரப்போகும் தேர்தலில் இந்த அதிருப்தியின் வெளிப்பாடுகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து எதிரொலிக்கும் என தெரிகிறது.. அதேபோல, "ராமராஜ்ஜியம் அமைத்தே தீருவோம்" என்று சொல்பவர்களும், முதலில் பெண் குழந்தைகளை பாதுகாத்தால் நல்லா இருக்கும் என்ற ஆதங்கக்குரலை கேட்க முமடிகிறது..!!!












Click it and Unblock the Notifications