யாருங்க அந்த பரிதாப பெண்.. ஐசியூவில் தலைக்கேறிய காமம்.. அதென்ன ஆண் "நர்ஸ்" முகத்தில்? இப்படியுமா?
ஜெய்ப்பூர்: மகா மட்டமான காரியத்தை ஒருவர் செய்திருக்கிறார்.. இப்போது அசிங்கப்பட்டு போலீஸ் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.. என்ன நடந்தது?
2 மாதங்களுக்கு முன்பு நம்முடைய சென்னையில், ஒரே நாளில் 2 பயங்கரமான சம்பவங்கள் மருத்துவனைகளில் அரங்கேறியிருந்தன.. திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக பணியாற்றி வருபவர் இளங்குமரன்.. 37 வயதாகிறது.. இளம்பெண் ஒருவர், அபார்ஷன் செய்வதற்காக டாக்டர் இளங்குமரனிடம் சிகிச்சைக்காக வந்திருக்கிறார்..

பலாத்காரம்: அப்போது சிகிச்சையின்போது, அந்தப் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் இளங்குமரன்.. தான் மயக்க நிலையில் இருந்தபோது, டாக்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக, அந்த பெண் கணவரிடம் தெரிவிக்கவும், இதைக்கேட்டு அதிர்ந்த கணவர், வில்லிவாக்கம் போலீசில் புகார் தந்தார்.. இறுதியில் டாக்டர் இளங்குமரன் மீது FIR பதிவு செய்யப்பட்டது.
அதேபோல, சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 22 வயது பெண், காப்பர் டி அணிந்திருக்கிறார்.. இதனால் ஏற்பட்ட வலியின் காரணமாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றிருக்கிறார். 2 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அப்பெண்ணுக்கு வயிற்றில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே, மருத்துவமனை ஊழியர்களும் அந்த பெண்ணை ஸ்கேன் மையத்திற்கு அழைத்து சென்றனர்.
பாலியல் கொடுமை: அப்போது அங்கிருந்த ரேடியாலஜி டாக்டர் அதாவது, கதிரியக்கவியல் முதுகலை மருத்துவர் கோகுல கிருஷ்ணன், அந்த பெண் நோயாளியிடம் பரிசோதனை என்ற பெயரில் டிரஸ்ஸை கழட்ட சொல்லியிருக்கிறார்.. மேலும், அருவருக்கத்தக்க வகையிலும் நடந்து கொண்டதாக தெரிகிறது..
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், நேராக தண்டையார்பேட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் தந்தார்.. இறுதியில், டாக்டர் கோகுல கிருஷ்ணன் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவானது.
ஜெய்ப்பூர்: இந்த சம்பவங்கள் பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதோ ஜெய்ப்பூரிலும் ஒரு அட்டகாசம் நடந்துள்ளது.. ஆல்வார் மாவட்டத்திலேயே மிகவும் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
24 வயது பெண் ஒருவர், நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவசர சிகிச்சை பிரிவு என்பதால், அங்கே நோயாளிகளுக்கான உறவினர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.. உதவியாளர்களையும் உள்ளே நுழைய அனுமதி கிடையாது. நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை என்பதால், ஐசியூவில், மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டியிருக்கிறது. அதனால், 24 வயது பெண்ணும் ஐசியூவில் தனியாகவே இருந்திருக்கிறார்.
யார் அந்த பெண்: இந்நிலையில், இன்று விடிகாலை நேரத்தில் மொத்த மருத்துவமனையும் நன்றாக தூங்கி கொண்டிருந்தது.. இளம்பெண்ணும் நன்றாக தூங்கி கொண்டிருந்தார்.. அப்போது, ஆண் நர்ஸ் ஒருவர் ஐசியூவில் நுழைந்துள்ளார்.. இளம்பெண்ணின் அருகில் சென்று, திடீரென ஊசி ஒன்றினை செலுத்தியிருக்கிறார்.
திடீரென விடிகாலையில், டாக்டர்கள் யாருமே இல்லாமல், மருத்துவ ஆலோசனையும் இல்லாமல், ஊசி செலுத்தப்பட்டதால், அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார்.. அதுமட்டுமல்ல, ஊசியுடன் வந்த ஆண் நர்ஸ் தன்னுடைய முகத்தை மறைத்து கொண்டு வந்திருக்கிறார். இதைப்பார்த்து மேலும் பதறிவிட்டார் இளம்பெண்.
சுதாரிப்பு: உடனடியாக சுதாரித்து அதுகுறித்து கேட்க முயல்வதற்குள், மயக்கத்தில் விழுந்துவிட்டார்.. கண்விழித்தபோது, பாலியல் வன்முறைக்கு தான் ஆளானதை உணர்ந்திருக்கிறார்.
அதற்கு பிறகு, என்ன செய்வதென்றே தெரியாமல், உடனடியாக போலீஸாருக்கு அவசர தகவலை அனுப்பினார்.. இந்த தகவலை கண்டு அதிர்ந்த போலீசார், உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர்.. அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து விசாரணையை துவங்கினர்.
அப்போதுதான், மருத்துவமனை ஊழியரான சிராக் யாதவ் என்ற ஆண் நர்ஸ் கையும் களவுமாக சிக்கினார். இதற்கு முன்பு இந்த ஆண் நர்ஸ், பெண் நோயாளிளை இதுபோல் பாதிப்புக்கு உள்ளாக்கினாரா? இவருடன் வேறு யாருக்காவது கூட்டு இருக்கிறதா? என்றெல்லாம் தெரியவில்லை. கைது செய்யப்பட்ட சிராக்கிடம் விசாரணை இப்போதுதான ஆரம்பமாகி உள்ளது.
கொடுமை: எத்தனையோ டாக்டர்கள், எண்ணற்ற உயிர்களை பிழைக்க வைக்க, தங்களையே அர்ப்பணித்து கொள்கிறார்கள்.. இந்த மருத்துவ தொழிலை, தங்கள் உயிரினும் மேலாக கருதி சேவை புரிந்தும் வருகிறார்கள்.. ஆனாலும், மருத்துவ துறையில் இப்படியும் ஒருசில கேடுகெட்ட ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் போலும்...!!












Click it and Unblock the Notifications