துண்டு துண்டாக்கிய புஷ்பா கணவர்.. அதுவும் 3 பீஸாக விழுந்த "கள்ள உறவு".. இப்படியும் ஒரு பெண்ணா?
கான்பூர்: புஷ்பா புருஷனுக்கு வந்த நிலைமையை பார்த்தீங்களா? இந்த கொடுமைக்கு காரணம், சாட்சாத் புஷ்பாவேதான். என்ன நடந்தது?.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் உள்ளது ஃபதான்பூர் என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் வினோத்.. இவரது மனைவிதான் புஷ்பா. இவர்கள் 2 பேருமே பிழைப்பு தேடி ஹரியானா மாநிலம் குருகிராம் சென்றிருக்கிறார்கள்.. அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் 2 பேருமே ஒன்றாக வேலை பார்த்து வந்தனர்.

திடீர் உறவு : அதே கம்பெனியில், சிவநாத் என்பவர் வேலை பார்த்து வந்தார்.. இவருக்கு 45 வயதாகிறது.. பீகார் மாநிலம், முனியாரி அணையை சேர்ந்தவர் சிவநாத்..
அப்போதுதான் அவருக்கும், புஷ்பாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி தகாத உறவில் கொண்டு போய் விட்டுவிட்டது.
கள்ள உறவு: ஒருகட்டத்தில், சிவநாத்துடனான உறவை மெல்ல.மெல்ல கைவிட முயன்றார் புஷ்பா.. இதற்காக அவரை விட்டு விலகி செல்லவும் துவங்கினார். ஆனால் , புஷ்பா உடனான உறவை சிவநாத்முறிக்க தயாராக இல்லை. மாறாக, ஏன் முன்பு போல என்னிடம் நெருங்கி பழகுவதில்லை? என்று கேட்டு, புஷ்பாவிடம் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது.
இதனால் எரிச்சல் அடைந்த புஷ்பா, தனது கணவருடன் சேர்ந்து சிவநாத்தை கொலை செய்ய முடிவு செய்தார். இந்த கொலையை செய்வதற்காகவே, தன்னுடைய கம்பெனியில் ஒரு மாதத்துக்கு முன்பே லீவு எடுத்துக்கொண்டு, கணவரையும் அழைத்துகொண்டு சொந்த ஊரான பிரதாப்கருக்கு வந்தார். புஷ்பா கம்பெனிக்கு லீவு போட்டுவிட்டு சொந்த ஊர் சென்று விட்டதாக தகவல் கிடைத்ததுமே, சிவநாத்தும் கிளம்பி புஷ்பா ஊருக்கு வந்துவிட்டார்..
தோழி பூனம் : இதைக் கேள்விப்பட்ட புஷ்பா, தன்னுடைய தோழி பூனத்தை அவரது வீட்டில் சந்திக்க வேண்டும் என்று சொல்லி, சிவநாத்தை புஷ்பா நைசாக பேசி அழைத்து வந்துள்ளார்.
தோழியின் வீட்டுக்குள் சென்றதுமே, அங்கு ஏற்கனவே மறைந்திருந்த வினோத் மற்றும் புஷ்பா இருவரும் சேர்ந்து சிவநாத்தின் கழுத்தை நெரித்துக்கொலை செய்தனர். இதில் மூச்சடைத்து சிவநாத் கீழே விழுந்துவிட்டார்..
ஆத்திரம் :.ஆனால், அப்போதும் ஆத்திரம் தீராத புஷ்பா தம்பதி, பிறகு கூரிய ஆயுதங்களால் சிவநாத் உடலை மூன்று துண்டுகளாக வெட்டி, பூனம் வீட்டிலேயே மண்ணை தோண்டி புதைத்து விட்டனர். இந்த பிறகு வினோத்தும், புஷ்பாவும் குருகிராமிற்கு சென்று மறுபடியும் டியூட்டியில் சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்துள்ளனர். .
இந்த நிலையில் தங்களது மகனை காணோம்என்று சிவநாத்தின் பெற்றோர் பீகார் போலீஸில் புகார் செய்தனர். இதனால் பீகார் போலிசாரும், சிவநாத் வேலை செய்யும் இடத்தில் அவரை விசாரிக்க வந்தனர்.. அப்போதுதான் அவர் புஷ்பாவுடன் தொடர்பில் இருந்ததாக ஊழியர்கள் சொல்லி இருக்கிறார்கள்..
அதிர்ச்சி: அதுமட்டுமல்ல, சிவநாத் யாருடன் செல்போனில் கடைசியாக பேசினார் என்றும் ஆய்வு செய்யப்பட்டது . கடைசி போன் புஷ்பாவிடமிருந்துதான் வந்திருக்கிறது என்பதையும் போலீஸார் உறுதி செய்தனர்.
இதையடுத்து புஷ்பாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.. கணவருடன் சேர்ந்து கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தோழி வீட்டில் புதைத்ததை ஒன்றுவிடாமல் புஷ்பா வாக்குமூலமாக சொன்னார்..
விசாரணை : இதனையடுத்து பிரதாப்கரில் உள்ள பூனம் வீட்டில் இருந்து, மண்ணை தோண்டி சிவநாத் உடலை போலீஸார் மீட்டு, போஸ்ட் மாட்டம் செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் புஷ்பாவும், தோழி பூனம் இருவருமே கைது செய்யப்பட்டனர்.. ஆனால், வினோத் தப்பியோடிவிட்டார்.. அவரைத்தான் போலீஸார் தேடி வருகிறார்கள்












Click it and Unblock the Notifications