"கன்னித்தன்மை".. மிட்நைட்டில் திரண்ட ஊர் ஜனம்.. திருதிருன்னு விழித்த ஜோடி.. அசிங்கமாக சிக்கிட்டாங்க
ஜார்கண்ட்: அசிங்கமாக, ஊர் மக்களிடம் கையும் களவுமாக மாட்டிக்கிட்டார்கள் ஒரு கள்ளஜோடி.. இது தொடர்பான சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் ஓயவில்லை.
வன்முறைகளின் உச்சமாக வடமாநிலங்கள் மாறி வருகின்றன.. குறிப்பாக கல்வி அறிவு இல்லாத கிராமங்களில் கற்பழிப்புகள், வன்முறைகள், காட்டுமிராண்டித்தமான செயல்கள் போன்றவை அரங்கேறியும் வருகின்றன.

போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என மக்களுக்காக இருந்தாலும், இன்னமும்கூட சில கிராமங்களில் கிராம பஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டு, அதிலேயே குற்றங்களுக்கு தண்டனையும் தரப்பட்டு வருகின்றன.. இதில் எல்லை மீறும் அநியாயங்களும், அக்கிரமங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
பஞ்சாயத்து : பஞ்சாயத்து என்ற பெயரில் ஊருக்கு நடுவே பெண்களை நிற்க வைத்து, அவர்களின் மானத்தை வாங்குவதும், இழிவாக நடத்தப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. பெரும்பாலும் இதில் சிக்கி கொள்வது பழங்குடி மற்றும் தலித் பெண்களே என்பது, அதைவிட வருத்தமான செய்தி..
இதற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சம்பவம் ஒன்றை உதாரணமாக சொல்லலாம்.. இங்கு சன்சி நாடோடி என்பவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் சமூகத்தில், கல்யாணம் ஆனதுமே, அந்த பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை செய்வார்களாம்.. இந்த டெஸ்ட்டில் அந்த பெண் வெற்றி பெற வேண்டுமாம்.. அப்போதுதான் அந்த இளம்பெண் திருமணத்திற்கு முன்பு கன்னிகழியாமல் உள்ளார் என்று நம்பப்படும்...
கன்னித்தன்மை: இப்படித்தான் ஒரு பெண்ணை, கன்னித்தன்மை டெஸ்ட் செய்துள்ளனர். இதில் அந்த பெண் தோல்வி அடைந்து விட்டாராம்,. அதனால், ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகையை மாப்பிள்ளை வீட்டுக்கு தர வேண்டும் என்று பஞ்சாயத்தில் உத்தரவிடப்பட்டதாம்.
இதோ இப்போதும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், பஞ்சாயத்து என்ற பெயரில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. ஜார்க்கண்ட் மாநிலம் கிரித் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. இவரது கணவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.. சில வருடங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு கல்யாணம் ஆனது.. திருமணம் முடிந்த ஒருசில நாட்களிலேயே, கணவன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். அதனால், கான்புராவில் உள்ள கிராமத்திற்கு அவரது மனைவி சென்றுள்ளார்.
இந்த நிலையில் இவருக்கும், குத்ரியாபாத்தை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது... இதுவே நாளடைவில் கள்ளக்காதலாக உருவெடுத்தது.. 2 பேருமே அடிக்கடி ரகசியமாக சந்தித்து உறவு கொண்டு வந்தனர்.
கள்ளக்காதலி: இப்படித்தான் சம்பவத்தன்று அந்த இளைஞர், தன்னுடைய கள்ளக்காதலியை சந்திக்க போயுள்ளார். அதுவும் நள்ளிரவில் அந்த பெண்ணின் வீட்டுக்கு போயிருக்கிறார். இதை அக்கம்பக்கத்தினர் பார்த்துவிட்டனர். உடனே அடுத்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம், மொத்த கிராமத்துக்கும் விஷயம் பரவிவிட்டது. அதனால், எல்லாரும் ஒன்றுதிரண்டு, அந்த பெண்ணின் வீட்டின் கதவை தட்டினார்கள். உள்ளே இருந்த கள்ளக்காதல் ஜோடி, ஊர்மக்களிடம் வசமாக சிக்கவிட்டது.
இதனால், பெண்ணின் குடும்பத்தினரும், கிராம மக்களும் கடும் ஆத்திரம் அடைந்தனர்.. அந்த இளைஞரை ஊருக்கு நடுவில் இருந்த மரத்தில், கயிற்றால் கட்டி வைத்து, அடித்து உதைத்தனர்... இதில் அந்த இளைஞருக்கு மண்டை உடைந்து, உடம்பெல்லாம் ரத்தம் கொட்டியிருக்கிறது.. ஆனால் கடைசிவரை ஊர்க்காரர்கள் போலீசுக்கு போகவில்லை.
பஞ்சாயத்து: இந்த தகவல் கிடைத்ததையடுத்து, போலீஸாரே விரைந்து அந்த கிராமத்துக்கு சென்று இளைஞரை மீட்டிருக்கிறார்கள்.. அந்த பெண்ணையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். ஆனால், இதுவரை எழுத்துப்பூர்வமாக யாரும் புகார் அளிக்கவில்லை.
இதனிடையே, மறுபடியும் ஊர்பஞ்சாயத்து கூடியது.. கையும் களவுமாக இந்த ஜோடி சிக்கிவிட்டதால், இவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்துவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
கணவன்: ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு சம்மதிக்கவேயில்லையாம்.. இளைஞரின் குடும்பத்தினரும் பிடிவாதமாக மறுத்துவிட்டார்களாம். 2 தரப்பிலுமே மறுப்பு தெரிவித்துவிட்டதால், இது சம்பந்தமாக என்ன செய்வதென்றே தெரியாமல் பஞ்சாயத்தினர் கையை பிசைந்து நிற்கிறார்களாம். இதற்கிடையில் வெளிநாட்டிலுள்ள கணவனுக்கும் விஷயத்தை சொல்லி உள்ளார்கள்.. அடுத்து என்ன நடக்க போகிறதென்று, இனிமேல்தான் தெரியவரும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications