For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசு வழங்கும் எல்.இ.டி பல்புகளுக்குள் ரகசிய காமிராவாம்.. அதிர்ந்து போன காஷ்மீர்

காஷ்மீரில் எல்.இ.டி பல்புகள் குறித்து வதந்திகள் பரவியது தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

By Vazhmuni
Google Oneindia Tamil News

காஷ்மீர்: காஷ்மீரில் எல்.இ.டி பல்புகள் குறித்து வதந்திகள் பரவியது தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது

கடந்த சில நாட்களாக மத்திய அரசின் உஜாலா திட்டத்தின் கீழ் காஷ்மீரில் வழங்கப்பட்ட எல்இடி பல்புகள் மூலம் மக்கள் கண்காணிக்கப்படுவதாக வதந்திகள் பரவி வந்தது.

அதன் விளைவாகவே, கடந்த ஒரு மாதத்தில் காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டு வந்தது.

எல்.இ.டி பல்பு - சிம்கார்ட் வதந்தி

எல்.இ.டி பல்பு - சிம்கார்ட் வதந்தி

மத்திய அரசின் உஜாலா திட்டத்தின் கீழ் வழங்கிய எல்இடி பல்புகளில் கண்காணிப்பு கருவி, கார்டு போன்றவற்றை பொருத்தி மக்களின் நடவடிக்கையை உளவு பார்ப்பதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவியது.

எல்.இ.டி பல்புகளை உடைத்த மக்கள்

எல்.இ.டி பல்புகளை உடைத்த மக்கள்

எல்.இ.டி பல்புகளால் ஏற்பட்ட வதந்தியால் காஷ்மீர் மக்கள் தங்களின் வீட்டில் இருக்கும் அந்த எல்.இ.டி பல்புகள் மற்றும் சிம் கார்டுகளை கழற்றி தூக்கி எரிந்தனர்.

வதந்தி குறித்து போலீசார் விசாரணை

வதந்தி குறித்து போலீசார் விசாரணை

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது மத்திய அரசு உஜாலா திட்டத்தின் கீழ் எல்.இ.டி பல்புகளை காஷ்மீரில் வழங்கியுள்ளது. இதன் காரணமாக எல்இடி பல்பு ஒன்றின் சந்தை விலை ரூ.250 என்ற போதிலும், அரசு ரூ.20 மான்யத்திற்கு எல்இ டி பல்புகளை வழங்கியது.

பல்பு விற்பனையாளர்கள் நஷ்டம்

பல்பு விற்பனையாளர்கள் நஷ்டம்

மத்திய அரசு , 250க்கு விற்பனை செய்யவேண்டிய பல்பை மானிய விலையில் 20 ரூபாய் வழங்கியதால் அப்பகுதியில் உள்ள எல்.இ.டி பல்பு விற்பனையாளர்கள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

வதந்தி குறித்த வீடியோ

வதந்தி குறித்த வீடியோ

இதனை ஈடுகட்ட மத்திய அரசு மானிய விலையில் வழங்கிய எல்.இ.டி பல்புகள் குறித்து சில தவறாக வதந்திகளை விற்பனையாளர்கள் பரப்பியது தெரிய வந்தது.

காட்டுத் தீ போல பரவிய வதந்தி

காட்டுத் தீ போல பரவிய வதந்தி

இது தொடர்பாக வதந்திகள் குறித்த வீடியோவை தயாரித்து சமூக வலைதளங்களில் அவர்கள் பரவ செய்துள்ளனர். இது காட்டுத் தீ போல பரவி மத்திய அரசு மாணிய விலையில் வழங்கியிருக்கும் எல்.இ.டி பல்புகளை மக்கள் உடைத்து வந்துள்ளனர்.

அதிகாரிகள் விளக்கம்

அதிகாரிகள் விளக்கம்

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அதிகாரிகள், எல்.இ.டி பல்புகள் குறித்து பரவி வரும் வதந்திகள் முற்றிலும் பொய். விலை உயர்ந்த் கண்காணிப்பு பொருட்களை ஒரு பல்பிற்குள் ஒளித்து வைப்பது சாத்தியமில்லை என்று தெரிவித்தனர்.
இதனால் காஷ்மீரில் சில நாட்களாக பரவி வந்த வதந்திகள் ஓய்ந்துள்ளது.

English summary
A couple of days back there was a rumour floating in Kashmir that the LED bulbs which were being distributed under the Government's Ujala scheme was fitted with surveillance equipments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X