கோவாக்சின் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்திய உலக சுகாதார அமைப்பு

Subscribe to Oneindia Tamil
கொரோனா தடுப்பூசி
Getty Images
கொரோனா தடுப்பூசி

இன்றைய நாளிதழ்கள் மற்றும் இணைய தளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து தருகிறோம்.

ஐ.நா மூலம் கொரோனாவிற்கான கோவாக்சின் தடுப்பூசி விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து தினமணி நாளிதழ் செய்தியில், "கோவாக்சின் தடுப்பூசியைப் பெற்றுள்ள நாடுகள், முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், எந்தமாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடவில்லை.

மேலும் அந்த அறிக்கையில், ஐ.நா அமைப்புகள் மூலம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை வாங்கிய நாடுகள் தக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி செயல்திறன் மிக்கதாக இருப்பதாகவும் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கோவாக்சின் ஏற்றுமதி நிறுத்தப்படுவதால் அதன் விநியோகம் பாதிக்கப்படவுள்ளது.

கடந்த மார்ச் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை, பாரத் பயோடெக் நிறுவனத்தில் அவசர கால பயன்பாட்டுக்கு பிந்தைய ஆய்வு செய்யப்பட்டது. இதன், தொடர்ச்சியாக, விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.'' என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடைக்கானலிலும் கொளுத்தும் வெயில்

கொடைக்கானல்
Getty Images
கொடைக்கானல்

கொடைக்கானல் மலைப்பகுதிகளிலும் அதிகரிக்கும் வெப்பநிலையால் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மாலை முதல் அதிகாலை வரை மட்டுமே குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலவுகிறது என்று தி இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்த அந்த செய்தியில், தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வாரவிடுமுறை நாட்களில் கோடைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலாபணிகள் செல்வது அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வழக்கம்போல் இந்தவாரமும் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. ஆனால் சுற்றுலாபயணிகளுக்கு இங்குநிலவும் சீதோஷ்ணநிலை பாதி ஏமாற்றத்தை தான் தந்துவருகிறது.

மாலை 3 மணி வரை வெயில்

காலையில் சூரியன் உதிக்கத்துவங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. மாலை 3 மணி வரை வெயிலின் தாக்கம் தொடர்கிறது. தரைப்பகுதியில் இருக்கும் அளவிற்கு அதிகமாக வெயிலின் தாக்கம் இல்லாதபோதும், கொடைக்கானலில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கிறது. இதனால் அவ்வப்போது மலைப்பகுதிகளில் காய்ந்த புற்களில் தீ ஏற்பட்டு காட்டுத்தீ பரவுவதும் தொடர்கிறது.

பகல் 3 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து இதமான குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலவுகிறது. மேகக்கூட்டங்கள் காணப்படுகிறது. சில நாட்களில் மாலையில் சாரல் மழையும் பெய்கிறது. இரவில் வெப்பம் குறைந்து 14 டிகிரி செல்சியஸாக உள்ளது.

காலையில் பிரையண்ட்பூங்கா, ரோஜா தோட்டம், மோயர் சதுக்கம், பைன்பாரஸ்ட், தூண்பாறை ஆகியவற்றை கண்டு ரசிக்கும் சுற்றுலாபயணிகள் மாலையில் இதமான குளிர்ந்த தட்பவெப்பநிலையை அனுபவிக்கின்றனர்.

ஒரு நாள் சுற்றுலாவாக கொடைக்கானல் சென்றுவருபவர்களுக்கு ஊர்திரும்பும் போது சிலமணிநேரம் மட்டுமே இதமான காலநிலையை அனுபவிக்க முடிந்தாலும், அங்கு தங்குபவர்கள் முழுமையாக கொடைக்கானலின் குளுமையை அனுபவிக்கின்றனர்.'' இவ்வாறு அந்த செய்தியில் உள்ளது.

பூஜை போட்ட போது வெடித்து சிதறிய புது புல்லட்

தீப்பற்றிய புல்லட்
Getty Images
தீப்பற்றிய புல்லட்

புதிய புல்லட் வாகனத்திற்கு பூஜை செய்து கொண்டிருந்த போது திடீரென்று தீப்பிடித்து எரிந்தது என்று தினத் தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

அந்த செய்தியில், ''ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், குண்டகல்லுவில் அருகே உள்ள கசாபுரம் ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. மைசூரை சேர்ந்த ரவிச்சந்திரா என்பவர் யுகாதி பண்டிகையை முன்னிட்டு, இந்த கோயிலுக்கு தனது புதிய புல்லட்டில் சென்றுள்ளார்.

புதிதாக வாங்கப்பட்ட புல்லட்டிற்கு கோயிலில் பூஜை செய்யப்பட்டது. அப்போது புல்லட் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்க முற்பட்ட போது புல்லட் வெடித்து சிதறியது இதனால் அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரா செய்வதறியாமல் திகைத்து நின்றார்.

புல்லட் வண்டி எரிந்துகொண்டிருப்பதை கண்ட பொதுமக்கள் யாரும் அதன் அருகே செல்லவில்லை. அப்போது, சற்றும் எதிராத வகையில், புல்லட்டின் பெட்ரோல் டேங்க் வெடித்து, காற்றில் பறந்தது. தீயும் குபீரென கிளம்பியதால் அதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தவர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

காரணம் என்ன ?

சிலர் எச்சரிக்கையாக தண்ணீரை ஊற்றியதால் தீ வேறெங்கும் பரவாமல் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது நீண்ட நேரம் நிற்காமல் ஓட்டி வந்ததால் வாகனம் உஷ்னம் தாங்காமல் தீ பிடித்து வெடித்ததா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும், வெகு தூரம் வண்டியை ஓட்டி செல்பவர்கள் வழியில் அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.'' என்று அந்த செய்தி உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+