மகளிருக்கு மாதம் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? கர்நாடகா பட்ஜெட்டில் பட்டியலிட்ட சித்தராமையா
பெங்களூர்: கர்நாடகாவில் மகளிருக்கு மாதம் ரூ.2000 வழங்கும் திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும். இந்த திட்டத்தின் நோக்கம் என்ன? என்பது பற்றி முதல்வர் சித்தராமையா தனது பட்ஜெட்டில் உரையில் இன்று தெளிவாக விளக்கினார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையாக பொறுப்பேற்றுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு தேர்தல் பிரசாரத்தில் அவர்கள் கூறிய 5 வாக்குறுதிகள் முக்கிய பங்கு வகித்தது.

அதன்படி அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ அரிசி இலவசம், க்ருஹ ஜோதி திட்டத்தில் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், க்ருஹ லட்சுமி திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை,அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் கொண்டு வரப்படும். யுவநிதி என்ற பெயரில் டிகிரி முடித்து வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ முடித்து வேலையில்லாதவர்களுக்கு ரூ.1,500 முதல் 3 ஆண்டு வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் மக்களை கவர்ந்தன.
இதில் இலவச பஸ் பயண திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 10 கிலோ இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள 3 திட்டங்களை செயல்படுத்துவதில் கர்நாடகா அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதற்கிடையே தான் கர்நாடகாவில் புதிதாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தவுடன் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
முதல்வராக உள்ள சித்தராமையா தான் நிதித்துறையை கையில் வைத்துள்ளார். இதனால் சித்தராமையாவை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஏற்கனவே அவர் 13 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று அவர் 14வது பட்ஜெட்டை சமர்பித்தார். இதில் மாநிலத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்த்த க்ருஹ லட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.2000 வழங்கும் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
இதுதொடர்பாக பெண்கள் மற்மு் குழந்தைகள் நலத்துறையின் கீழ் சித்தராமையா தனது பட்ஜெட் உரையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதொடர்பாக சித்தராமையா கூறியதாவது: சமூகத்தில் பிரச்சனைக்குரிய தீமைகளை ஒழிப்பதில் கல்வி மற்றும் நிதி சார்ந்த முன்னெடுப்புகள் முக்கிய பங்காற்றுகிறது. அதன்படி தான் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Direct Benfit Transfer (DBT) முறையில் நேரடியாக குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும்.
இந்த க்ருஹ லட்சுமி திட்டத்தில் ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மதிய உணவு தயாரிப்பாளர்கள்,
ஜென்டர் மைனாரிட்டிஸ் (திருநங்கை, திருநம்பி உள்ளிட்ட சமூகத்தினர்), முன்னாள் தேவதாசிகள் இந்த திட்டத்தில் பயன்பெறுவார்கள். மேலும் இந்தத் திட்டம் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். வறுமை குறையும். பணவீக்கத்தால் பிரச்சனையை சந்திக்கும் குடும்பத்துக்கு இது ஆறுதலாக இருக்கம். கால்நடை வளர்ப்பு, குடிசை தொழில், கால்நடை வளர்ப்பு மேற்கொள்பவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.
அதோடு கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் பெண்கள் அந்த சமயங்களில் கட்டாயமாக பணிபுரிய வேண்டும் என்ற சூழலை இது மாற்றும். இதுதவிர மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு சமமான இடம் வழங்குவதற்கான சின்ன முயற்சி இதுவாகும்.
அதோடு நாட்டிலேயே தொடங்கப்பட்ட மிகப்பெரிய நிதி பாதுகாப்பு திட்டம் என இதனை எந்தவித சந்தேகமும் இன்றி நாம் கூறலாம். இந்த திட்டத்தை நிறைவேற்றம் செய்ய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி செலவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கான பதிவு நடைமுறை விரைவில் தொடங்கும். அதன்பிறகு பெண்களின் வங்கி கணக்கில் மாதம் ரூ.2000 செலுத்தப்படும்'' என்றார்.

முன்னதாக ஏபிஎல் மற்றும் பிபிஎல் வகை ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. மேலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் உதவித்தொகை பெறுவோர் அதாவது முதியோர் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அரசு சார்பில் உதவித்தொகை, ஓய்வூதியம் பெற்றாலும் கூட அவர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் ரூ.2000 மாதந்தோறும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதோடு இதற்கு முன்பு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் திட்டம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளது. ஏனென்றால் இந்த திட்டத்தை செயல்படுத்த வங்கி கணக்கு விபரம், ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களுடன் விண்ணப்பம் செய்ய வேண்டியது அவசியமானதாக உள்ளது. இதுதொடர்பான பதிவு தான் விரைவில் தொடங்கும் என சித்தராமையா பட்ஜெட்டில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கத்தக்கது.
-
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ் -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா!












Click it and Unblock the Notifications