ஒடிசாவின் முதல் பாஜக முதலமைச்சர் ஆகப்போவது யார்? பாஜகவின் அதே ஃபார்முலா? ரேஸில் 6 தலைவர்கள்!
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது பாஜக. பாஜக சார்பில் ஒடிசாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தது. ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, சுயேட்சைகள் 3 இடங்களிலும் வென்று உள்ளனர்.
பாஜக ஆட்சிக்கு வருகிறது: ஒடிசாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 74 சீட்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் தற்போதைய தேர்தலில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், ஒடிசாவில் முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ளது பாஜக.
நவீன் பட்நாயக், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு அரசியலுக்கு வந்து பிஜு ஜனதா தளம் கட்சியை தொடங்கினார். 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒடிசா சட்டசபை தேர்தலில் அவரது கட்சி அமோக வெற்றி பெற்றது. நவீன் பட்நாயக் முதல்வர் ஆனார். அன்று முதல் தொடர்ந்து 5 தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்து வருகிறார் நவீன் பட்நாயக். தொடர்ந்து 6வது முறையாக ஆட்சியைப் பிடிக்க நவீன் பட்நாயக் தயாராகி வந்த நிலையில், தேர்தல் முடிவு அவருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், ஹிஞ்சிலி தொகுதியில் அவர் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். மற்றொரு தொகுதியான காந்தபாஞ்சியில் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார் நவீன் பட்நாயக். தொடர்ச்சியாக வெற்றி பெற்று 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்த நவீன் பட்நாயக் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளில் ஒன்றில் தோற்றுள்ளதோடு, ஆட்சியையும் பறிகொடுத்துள்ளார்.
நவீன் பட்நாயக்கின் பிஜேடி கட்சியை தோற்கடித்து, ஒடிசாவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது பாஜக. 5 முறையாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் பிஜு ஜனதா தளத்தை வீழ்த்தி முதல் முறையாக ஒடிசாவில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது பாஜக. இதையடுத்து ஒடிசாவின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒடிசாவின் அடுத்த முதல்வர் யார்?: ஒடிசா மாநில பாஜகவின் முக்கிய பிரமுகர்களில், 6 தலைவர்கள் முதல்வர் வேட்பாளர் ரேஸில் உள்ளனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் சிட்டிங் எம்.பியுமான ஜுவல் ஓரம், பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, பாஜகவின் தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா, பாஜக தலைவர் தர்மேந்திர பிரதான் ஆகியோரும் உள்ளனர்.
ஜுவல் ஓரம்: சுந்தர்கர் மக்களவைத் தொகுதியில் ஜுவல் ஓரம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முதல்வர் பதவிக்கான ரேஸில் அவர் முன்னிலையில் இருப்பார் என்ற யூகங்கள் எழுந்துள்ள நிலையில், தான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை, ஆனால் அந்த பணியை தனக்கு வழங்கினால் பணியாற்றுவேன் என்று ஓரம் கூறியுள்ளார்.
பைஜயந்த் பாண்டா: கேந்திரபாரா மக்களவைத் தொகுதியில் பாஜகவின் தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா வெற்றி பெற்றுள்ளார். பாண்டா, நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளார்.
சம்பித் பத்ரா: பூரி மக்களவைத் தொகுதியில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா வெற்றி பெற்றுள்ளார். மருத்துவரான பத்ரா, 2014ல் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். சுற்றுலாத் துறையின் தலைவராகவும் இருந்துள்ளார். புரி ஜெகந்நாதரே பிரதமர் மோடியின் பக்தர்தான் என்று சம்பித் பத்ரா பேசியது சர்ச்சையை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தர்மேந்திர பிரதான்: சம்பல்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக மூத்த தலைவரும், கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சருமான தர்மேந்திர பிரதான் வெற்றி பெற்றுள்ளார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக பிரதான் பல சீர்திருத்தங்களையும் திட்டங்களையும் தொடங்கியுள்ளார்.
இந்த நான்கு தலைவர்களுமே, ஒடிசாவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, தற்போது அந்தந்த மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். எனவே, இவர்களை ஒடிசா முதல்வராக தேர்வு செய்தால், லோக்சபா தொகுதிக்கும், சட்டசபை தொகுதி ஒன்றுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டி இருக்கும். எனவே இவர்கள் நால்வரையும் தவிர, வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களில் ஒருவரை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மன்மோகன் சமல்: ஒடிசா சட்டசபை தேர்தலில் சண்டபாலி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் ஒடிசா மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல். பாஜகவை ஒடிசா மாநிலத்தில் வலுப்படுத்டுவதில் முக்கிய பங்காற்றிய சமாலும் முதல்வர் பதவிக்கான ரேஸில் இருக்கிறார்.
ஜெயநாராயண மிஸ்ரா: பாஜக தலைவர் ஜெயநாராயண் மிஸ்ரா 2022 ஆம் ஆண்டு முதல் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். ஜெயநாராயண் மிஸ்ரா மீண்டும் ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் சம்பல்பூர் தொகுதியில் வென்றுள்ளார்.
ஒடிசாவில் மண்ணின் மைந்தர் இல்லாதவரை முதல்வராக நவீன் பட்நாயக் நினைப்பதாக பாஜக கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டது, தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒடிசாவை சேர்ந்த நபரை முதல்வராக தேர்வு செய்ய திட்டமிட்டு வருகிறது பாஜக.
2023 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் முதல்வர்களாக புதிய முகங்களைத் தேர்ந்தெடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது பாஜக. அதே ஃபார்முலாவை ஒடிசாவிலும் பயன்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களுக்குள் பாஜக தலைமை முடிவை அறிவிக்கும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications