எங்க போனாலும் என்னையே ஏன் அடிக்கிறாங்க?: கெஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தான் ஒரு சிந்தனையாளர் என்றும், தன்னையே ஏன் குறி வைத்து தாக்க வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடமேற்கு டெல்லியில் உள்ள சுல்தான்புரியில் இன்று திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். அப்போது ஆட்டோ டிரைவர் ஒருவர் அவருக்கு மாலை அணிவித்துவிட்டு கன்னத்தில் அறைந்துவிட்டார்.

இந்நிலையில் இது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில்,

சிந்தனையாளர்

சிந்தனையாளர்

நான் ஒரு சிந்தனையாளர். என்னையே ஏன் குறி வைத்து தாக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். 5 நாட்களுக்குள் 2வது முறையாக கெஜ்ரிவால் தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல்

தாக்குதல்

என்னை மட்டும் அறைவது, குத்துவது, என் மீது கருப்பு மை வீசித் தாக்குவதுமாக உள்ளனர். அது ஏன் என்னை மட்டுமே இப்படி தாக்குறார்கள் என்றார் கெஜ்ரிவால்.

சதி

சதி

என் மீது நடந்து வரும் தொடர் தாக்குதல்களுக்கு பின்னால் யார், யார் இருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன வேண்டும்? என்னை தாக்கி அவர்கள் என்ன சாதித்துவிட்டனர் என்றார் கெஜ்ரிவால்.

முகவரி

முகவரி

நாட்டின் பிரச்சனைகளுக்கு வன்முறை பதிலாகுமா? அவர்கள் இடம் மற்றும் நேரத்தை தெரிவித்தால் நான் அங்கு வருகிறேன். அப்பொழுது அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளட்டும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+