மேயர் முதல் குஜராத் முதல்வர் வரை... விஜய் ரூபானி கடந்து வந்த பாதை !
காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் நம்பிக்கைக்குரிய விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக பட்டேல் சமூகத்தை சேர்ந்த நிதின் பட்டேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் படேல்(75), வயது முதிர்வு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறினார். ஆனந்தி பென் ராஜினாமாவுக்கு தலித் மற்றும் படேல் இனத்தவர்களின் போராட்டமும் காரணமாகக் கூறப்பட்டது.

அடுத்த ஆண்டு குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் ஒரு பிரபலமானவரை முதல்வராக்கி தேர்தலை சந்திக்க பாஜக தலைமை திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் மாநிலத்தின் புதிய முதல்வராக விஜய் ரூபானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிதின் படேல், துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவருக்கும் விஜய் ரூபானி மிகவும் நெருக்கமானவர்.
விஜய் ரூபானி:
- ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த விஜய் ரூபானி (60), பி.ஏ. மற்றும் எல்.எல்.பி பட்டம் பெற்றவர்.
- ஆரம்ப காலத்தில் ஏபிவிபி.யில் உறுப்பினராகச் சேர்ந்தார். பின்னர் 1971 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் சங்கத்தில் இணைந்தார்.
- ராஜ்கோட் மாநகராட்சியின் மேயராகவும், மாநிலங்களவையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
- கடந்த 2014ஆம் ஆண்டில் குஜராத் மாநில சபாநாயகராக இருந்த வஜூபாய் வாலாவின் ராஜினாமாவை அடுத்து ராஜ்கோட் மேற்கு சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
- மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது விஜய் ரூபானி மாநில பாஜக தலைவராக பதவி வகித்தார்.
- போக்குவரத்து, குடிநீர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications