ஜாதியை வச்சு மக்களை பிரிக்கிறாங்க.. ஏமாந்துடாதீங்க.. பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு.. மோடி டென்ஷன்!
போபால்: ஜாதியின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார். பீகார் அரசு மாநில அளவிலான ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிட்ட நிலையில் பிரதமர் மோடி இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்த அவர்.. நாட்டில் ஒற்றுமையை பற்றி பேசாமல் ஜாதி ரீதியிலான பிரிவினையை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்வதாக கூறினார்., ஏழைகளின் உணர்வுகளோடு அரசியல் கட்சிகள் விளையாடுவதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

முன்பு அவர்கள் ஏழைகளின் உணர்வுகளோடு விளையாடினார்கள்... இன்றும் அதே விளையாட்டைத்தான் ஆடுகிறார்கள், முன்பு சாதியின் பெயரால் நாட்டைப் பிரித்தார்கள்... இன்றும் அதே பாவத்தைச் செய்கிறார்கள். ஊழல்.. ஊழல்.. இதை செய்வதை அவர்கள் நிறுத்தவில்லை.. அவர்கள் மேலும் ஊழல்வாதிகளாக உள்ளனர், என்று குவாலியரில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.
பீகார் கணக்கெடுப்பு: பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் இப்பொழுது வெளியாகி உள்ளன. மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் 36 % பிற்படுத்தப்பட்டோர் 27 % பட்டியல் சமூகத்தவர் 20% பழங்குடியினர் 1.6% இருப்பது தெரியவந்துள்ளது.
பொதுப் பிரிவினர் 15.5 % மட்டுமே இருப்பது தெரிய வந்திருக்கிறது. தற்போது பீகாரில் பட்டியல் சமூகத்திற்கு 16 % பழங்குடியினருக்கு 1% மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 12% பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 18 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 63 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்டோர் 30 சதவீத இடத்தை மட்டுமே இப்போது பெறுகின்றனர். 15.5% உள்ள பொதுப் பிரிவினர் 50% இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர்.
இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை தொடர்ந்துதான் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த ஜாதிரி கணக்கெடுப்பிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் தொடர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்தான் இந்த கணக்கெடுப்பு குறித்து தற்போது கடுமையான விமர்சனங்களை மோடி வைத்துள்ளார்.
கோரிக்கை: இந்த நிலையில்தான் பீகார் மாநில அரசைப் போல தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமவளவன் கோரிக்கை வைத்துள்ளார். அதில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் கல்வியில், வேலைவாய்ப்பில், அரசியல் பிரதிநிதித்துவத்தில் உரிய இடங்களைப் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பெற முடியாத நிலை தொடர்ந்து வருகிறது.
இது மாபெரும் சமூக அநீதியாகும். எஸ்சி- எஸ்டி பிரிவினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றாலும் 50% உச்சவரம்பு விதிக்கப்பட்டதால் அவர்களுடைய இட ஒதுக்கீடும் உயர்த்தப்பட முடியாத நிலை உருவாகிவிட்டது. 10 சதவீதம் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு பிறகு 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற குரல்கள் வலுவாக எழுந்தன. ஆனால், ஒன்றிய பாஜக அரசு அதைப் பொருட்படுத்தவில்லை.
பல்வேறு மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்த முற்பட்ட போதெல்லாம் உச்ச நீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகை குறித்த போதிய தரவுகள் இல்லை எனக்கூறி அதை நிராகரித்தது. இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்று வலுவான குரல் எழுந்தது. அதன் காரணமாகவே ஒன்றிய பாஜக அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பையே நடத்தாமல் ரத்து செய்துள்ளது.
உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு காட்டிய ஆர்வத்தை பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு காட்டவில்லை. ஒன்றிய பாஜக அரசு முழுக்க முழுக்க உயர் சாதியினரின் நலனைக் காப்பாற்றுவதாகவே உள்ளது என்பதற்கு இதுவே ஒரு சான்றாகும். இந்தச் சூழலில் வெளியாகி உள்ள பீகார் மாநில சாதிவாரி சர்வே இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். அரசு நிர்வாகத்திலும், உயர்கல்வியிலும், தொடர்ந்து தாங்கள் புறக்கணிக்கப்படுவது இனிமேலும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்து என்கிற பெயரில் பாஜக - ஆர்.எஸ்.எஸ் நடத்தும் அரசியல் உயர் சாதியினரின் நலனுக்கானது தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது, என்று திருமாவளவன் எம்பி கூறியுள்ளார்.
-
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications