ஜம்முவில் பாஜகவுக்கு பெருகும் தொடர் ஆதரவு! காஷ்மீரில் வெளியூர் ஆட்டக்காரராக பார்க்கப்படுவது ஏன்?
ஸ்ரீநகர்: ஜம்முவில் பாஜகவுக்கு பெரும்பாலான மக்களின் ஆதரவு இருப்பது ஏன் தெரியுமா, அது போல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அக்கட்சிக்கு போதிய ஆதரவு இல்லாதது ஏன் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகள் கழித்து சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து அக்டோபர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கிறது. இன்றைய தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஜம்முவில் 43 தொகுதிகளிலும் காஷ்மீரில் 47 சட்டசபை தொகுதிகளும் காணப்படுகின்றன. இந்த தொகுதி மறுவரை என்பது கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று வெளியான கருத்துக் கணிப்புகளில் பாஜகவுக்கு ஜம்முவில் 27 முதல் 31 இடங்களும், காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 11 முதல் 15 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என சி வோட்டர் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.
அது போல் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் காங்கிரஸும் மாநாட்டுக் கட்சியும் 29 முதல் 33 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் பாஜகவின் செல்வாக்கு உயர காரணம் என்ன என்பதை ஆராய்ந்தோமேயானால் அங்கு இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் பாஜகவுக்கு ஜம்முவில் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும்.
அது போல் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அங்கு மாநில கட்சிகளுக்கே அவர்களது ஆதரவு இருக்கும். இதற்கு காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால் பொதுவாக கடந்த சில ஆண்டுகளாகவே டெல்லிக்கும் காஷ்மீருக்குமான உறவு சுமூகமாக இல்லை.
அதிலும் கடந்த 2019ஆம் ஆண்டு 370 சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கி, யூனியன் பிரதேசங்களாக அறிவித்ததால் நிலைமை மோசமடைந்தன. அத்துடன் மூன்று முன்னாள் முதல்வர்களை வீட்டுக் காவலில் வைத்ததும் 100- க்கும் மேற்பட்ட தலைவர்கள் நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டும் இருந்தனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் சில தொகுதிகளில் பாஜக போட்டியிடாததற்கு காரணம் அக்கட்சி மீது அங்குள்ள மக்கள் கோபத்தில் இருப்பதால் அதனால் அங்கு வெல்ல முடியாது என்பதை அறிந்துக் கொண்டே அங்கு போட்டியிடவில்லை என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். எனினும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாஜக போட்டியிடாதது உள்ளூர் பாஜகவுக்கு அதிருப்தியை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications