மாற்றி விடுவதற்கு ஆள் இல்லாததால் தப்பித்தார் பொன். ராதாகிருஷ்ணன்!
டெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றத்திலிருந்து பொன். ராதாகிருஷ்ணன் தப்பியுள்ளார். அவரை விட்டால் தமிழகத்தில் வேறு எம்.பிக்கள் பாஜகவுக்கு இல்லாத காரணத்தால் அவரை தூக்கவில்லை என்று தெரிகிறது.
மத்தியில் மோடி அரசு அமைந்தபோது அமைச்சராக பதவியேற்றார் பொன். ராதாகிருஷ்ணன். தமிழகத்தில் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி கிடைத்தது. அது கன்னியாகுமரி. அதில் வென்றவர் பொன். ராதாகிருஷ்ணன்.

இதன் காரணமாக பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக பதவியேற்றார். அவரது கூட்டணியில் இடம் பெற்று வெற்றி பெற்ற இன்னொருவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ். ஆனால் அவருக்குப் பதவி தரவில்லை மோடி. இந்த கடுப்பில்தான் பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறியது பாமக.
இந்த நிலையில் பொன். ராதாகிருஷ்ணன் மீது ஏகப்பட்ட அதிருப்தி நிலவுகிறது. சட்டசபைத் தேர்தலில் வலுவான கூட்டணி அமையாமல் போய் பாஜக படு தோல்வியைச் சந்தித்தது.
கட்சிக்குள் நிலவிய கடுமையான உட்கட்சிப் பூசலால் வேட்பாளர் தேர்வில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த வகையில் பொன். ராதாகிருஷ்ணன் மீது பாஜக மேலிடத்திற்கு கடும் அதிருப்தி உள்ளது.
அடுத்து குளச்சல் துறைமுகம் தொடர்பாக அவர் பேசிய சில பேச்சுக்களை பாஜக மேலிடம் ரசிக்கவில்லை. தேவைப்பட்டால் பதவியை தூக்கி எறிவேன் என்று அவர் கூறியதையும் பாஜக மேலிடம் ரசிக்கவில்லை.
இப்படி சின்னச் சின்னதாக நிறைய அதிருப்திகள் உள்ளன. ஆனாலும் அவரது மத்திய அமைச்சர் பதவியை பறிக்கவில்லை கட்சி மேலிடம். காரணம், அவரை விட்டால் தற்போது தமிழகத்தில் வேறு யாரும் இல்லை என்பது ஒரு காரணம். அதை விட முக்கியமாக உள்ளாட்சித் தேர்தல், அடுத்து லோக்சபா தேர்தல் வரும் நிலையில் தமிழத்தில் மத்திய அமைச்சர்கள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டால் அதை வைத்து மற்ற கட்சியினர் கிண்டலடிக்கலாம், மக்கள் மத்தியில் தேவையில்லாத தர்மசங்கடத்தை சந்திக்க நேரிடும் என்பதால் பொன். ராதா மீது இப்போதைக்கு கட்சி மேலிடம் கை வைக்கவில்லையாம்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications