அமராவதி இருக்கும் போது.. சந்திரபாபு நாயுடு "கேசரப்பள்ளி" ஐடி பார்க்கில் பதவியேற்பது ஏன் தெரியுமா?
அமராவதி: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு அமராவதியில் பதவியேற்பார் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் அவர் இன்று கேசரப்பள்ளி ஐடி பார்க்கில் தான் அவர் முதல்வராகப் பதவியேற்கிறார். இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்.. பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்துப் பார்க்கலாம்.
ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு இன்று ஜூன் 12ஆம் தேதி காலை 11:30 மணியளவில் பதவியேற்கிறார்.

அவரது பதவியேற்பு விழா முதலில் அமராவதியில் நடக்கும் எனத் தகவல் வெளியானது. இருப்பினும், அது இப்போது கேசரப்பள்ளி ஐடி பார்க்கில் தான் நடக்கிறது. ஏன் திடீரென பதவியேற்பு விழா நடக்கும் இடம் மாற்றப்பட்டது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஹைதராபாத் தலைநகர் இல்லை: ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட போது ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக ஹைதராபாத் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த 10 ஆண்டுகள் என்ற வரம்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இதனால் இனி அதிகாரப்பூர்வமாகவே ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத் இல்லை என்ற சூழல் உருவானது.
இதன் காரணமாக முதலில் அமராவதியில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா நடக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் இப்போது கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கன்னவரத்தில் உள்ள கேசரப்பள்ளி ஐடி பார்க் அருகே பதவியேற்பு விழா நடக்கிறது.
கேசரப்பள்ளி ஐடி பார்க்: முதலில் இந்த கேசரப்பள்ளி ஐடி பார்க் குறித்து நாம் பார்க்கலாம். இந்த கேசரப்பள்ளி ஐடி பார்க்கிற்கு கடந்த 2006ஆம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி திறந்து வைத்தார். விஜயவாடாவை ஐடி மையமாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த ஐடி பார்க் திறக்கப்பட்டது.
தொடர்ந்து 2010ஆம் ஆண்டில் அப்போதைய ஆந்திர முதலமைச்சர் கோனிஜெட்டி ரோசய்யா இங்குத் திட்டமிடப்பட்ட ஐந்து டவர்களில் முதலாவது டவரான மேதாவைத் திறந்து வைத்தார்.
என்ன காரணம்: இந்த பதவியேற்பு விழாவில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், அவர்களின் சவுகரியத்தை மனதில் வைத்து எளிதாக வந்து செல்ல வேண்டும் என்பதற்காகவே பதவியேற்பு விழா அமராவதியில் இருந்து இந்த ஐடி பார்க்கிற்கு மாற்றப்பட்டதாகத் தெரிகிறது. ஏனென்றால் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முதல் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஐடி பார்க் விஜயவாடா சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகில் (வெறும் 1.5 கிமீ தொலைவு) அமைந்துள்ளது.. மேலும், விஜயவாடா நகரத்திலிருந்து 20 கிமீ தொலைவில் இந்த ஐடி பார்க் அமைந்துள்ளது. இதுவே பதவியேற்பு விழா நடக்கும் இடம் மாற முக்கிய காரணமாகும்.
இது தவிரப் பதவியேற்பு நடைபெற உள்ள ஐடி பார்க் மைதானம் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கே ஈஸியாக சுமார் 50,000 பேர் வரை அமரலாம். இந்த பதவியேற்பு விழாவில் தெலுங்கு தேசம், ஜன சேனா மற்றும் பாஜக தொண்டர்களும் பெரியளவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கும் இதுவே சரியானதாக இருக்கும்.
அமராவதியில் உள்ள சிக்கல்: மறுபுறம், அமராவதியானது விஜயவாடா விமான நிலையத்திலிருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ளது.. இதனால் அரசியல் தலைவர்கள் வந்து செல்வதில் பிரச்சினை ஏற்படலாம்.. தலைவர்கள் விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து எளிதாக வந்து செல்ல அமராவதியில் குறைந்தது 6 ஹெலிபேடுகள் அமைக்க வேண்டும். மேலும், கடந்த ஐந்தாண்டு ஜெகன் மோகன் ஆட்சியில் அமராவதி பெரியளவில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இதுவே பதவியேற்பு விழா அமராவதியில் இருந்து மாற காரணமாகும்.
அமராவதி கடந்து வந்த பாதை: ஹைதராபாத் தெலுங்கானா மாநிலத்துடன் சென்றுவிடவே.. ஆந்திராவுக்கு புதிய தலைநகராக அமராவதியை உருவாக்கப் போவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இந்த நகருக்கு சந்திரபாபு நாயுடு நேரடியாக 2015இல் அடிக்கல் நாட்டினார். சுமார் 217 சதுர கி.மீ பரப்பளவில் இந்த நகரை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகளும் வேகமாக நடந்தது.
இருப்பினும், கடந்த 2019இல் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும்.. அமராவதியை அவர் பெரியளவில் கண்டு கொள்ளவில்லை.. அமராவதியைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்தாமல் அவர் மூன்று தலைநகர் ஃபார்முலாவை கையில் எடுத்தார். நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம், சட்டமன்றத் தலைநகராக அமராவதி, நீதித்துறை தலைநகராக கர்னூல் என அறிவித்தார். இது அமராவதியின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாகவே இருந்தது.
கோபம்: அமராவதியை ஜெகன் முடக்கியதாகவே அப்பகுதி விவசாயிகள் கோபம் கொண்டனர். ஏனென்றால், அமராவதி தலைநகராக்கப்பட்டால் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, வேலைவாய்ப்பு கிடைக்கும் என அப்பகுதி மக்கள் பலரும் நிலங்களைத் தானாக முன்வந்து அளித்திருந்தனர். மேலும், ஜெகனின் இந்த முடிவால் அங்கு ரியல் எஸ்டேட்டும் மொத்தமாகச் சரிந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பில் இருந்தனர்.
நீதிமன்றம்: இது தொடர்பான வழக்கில் கூட அமராவதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக டெவலப் செய்ய வேண்டும் என ஆந்திர ஐகோர்ட் கடந்த 2022 மார்ச் மாதம் உத்தரவிட்டது. இருப்பினும், ஜெகன் அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக வந்துவிட்ட நிலையில், மீண்டும் அமராவதி பணிகள் வேகமெடுக்கும் என்றே தெரிகிறது.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications