அப்போ மபி? டிகே சிவக்குமார் தப்பு பண்ணிட்டாரே! போக வேண்டிய இடமே வேற! பிளானில் சொதப்பிய காங்கிரஸ்?
போபால்: மத்திய பிரதேசம் உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெலுங்கானாவிற்கு புறப்பட்டு உள்ளார். தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை காக்கும் விதமாக அவர் தெலுங்கானா புறப்பட்டு சென்று உள்ளார். ஆனால் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் சொதப்பிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் - மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் அதற்கு வரப்போகும் டீசர் போல பார்க்கப்படுகிறது. இதில் மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது.

அங்கே தற்போது ஆட்சி யார்?: கடந்த 4 முறையாக அங்கே பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. 3 முறையாக வரிசையாக அங்கே 2005ல் இருந்து 2013 வரை அங்கே பாஜக ஆட்சி செய்தது.
சிவராஜ் சிங் சவுகான் அங்கே ஆட்சி அமைத்தார். அதன்பின் கடந்த தேர்தலில் அங்கே காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆனால் 1 வருடத்தில் அங்கே கமல்நாத் ஆட்சியை ஜோதிராதித்யா சிந்தியா கவிழ்த்தார். இவர் பாஜகவில் இணைந்து தன்னுடன் சில எம்எல்ஏக்களையும் அழைத்து சென்று ஆட்சியை கவிழ்த்தார். இதன்பின் வந்த இடைத்தேர்தலில் பாஜக கூடுதல் எம்எல்ஏக்களை மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சிக்கு வந்தார்;.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் 114, பாஜக 109 இடங்களில் வென்றது. அதன்பின் 1 வருடத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிந்தியா தலைமையில் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் பாஜக 19 இடங்களில் வென்றது. இதன் மூலம் 128 இடங்கள் என்று மெஜாரிட்டி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தது.
பெரிய மாநிலம் - மெஜாரிட்டி முக்கியம்: மத்திய பிரதேச சட்டசபை கிட்டத்தட்ட தமிழ்நாடு போன்றது ஆகும். இங்கே 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும்.
இங்கே கருத்து கணிப்புகள் எல்லாம் பாஜகவிற்கு நெருக்கமான மெஜாரிட்டியை மட்டுமே காட்டி உள்ளன. அதாவது 116க்கு மிக நெருக்கமாக 118, 120 மெஜாரிட்டி கிடைக்கும் என்றே கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன. சில கருத்து கணிப்புகள் இங்கே தொங்கு சட்டசபை உருவாகும் என்று கூட கணித்து உள்ளன.
கருத்து கணிப்புகள்; உதாரணமாக, ஜான் கி பாத் கணிப்பில், காங்கிரஸ் 102-125 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டு உள்ளது. பாஜக 100-123 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டு உள்ளது. இதர கட்சிகள் 0-5 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.இதன் மூலம் கடந்த முறை போல இந்த முறையும் மத்திய பிரதேசத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கின்றன.
டைம்ஸ் நவ் - ETG எக்சிட் போல் கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் கட்சி 110-124 இடங்களைக் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாஜக 106-116 இடங்களைக் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் - ETG எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பின்படி, பந்தேல்கண்ட் பகுதியில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.
இப்படி சில கணிப்புகள் தொங்கு சட்டசபை உருவாகும் என்று கணித்து உள்ளன. இதுதான் காங்கிரஸ், பாஜக இரண்டிற்கும் தலைவலியை கொடுத்துள்ளது.
டிகே சிவக்குமார்: இப்படிப்பட்ட நிலையில்தான் காங்கிரஸ் மூத்த தலைவர், கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெலுங்கனாவிற்கு சென்றுள்ளார். தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு முழு மெஜாரிட்டி கிடைக்கும் என்று கருதப்பட்ட நிலையில், டிகே சிவக்குமார் அங்கே எம்எல்ஏக்களை குதிரை பேரத்தில் இருந்து காக்க.,. ஆளும் பிஆர்எஸ் அரசின் திட்டங்களில் இருந்து காக்க சென்றுள்ளார்.
ஆனால் கணிப்புகள்படி தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு கிளியர் மெஜாரிட்டி கிடைக்கும். ஆனால் மத்திய பிரதேசத்தில்தான் தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்க டிகே சிவக்குமார் போன்ற வலிமையான நபர்கள் மத்திய பிரதேசமே செல்ல வேண்டும். தொங்கு சட்டசபை உருவாகும் பட்சத்தில் கடந்த முறை போல இந்த முறையும் மத்திய பிரதேசத்தில்தான் குதிரை பேரங்கள், ரிசார்ட் அரசியல்கள் நடக்கும்.
அப்படி இருக்க டிகே சிவக்குமார் இங்குதான் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் தெலுங்கானா சென்றது காங்கிரசின் சொதப்பல் திட்டமாகவே பார்க்கப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications