தேர்தல் முடிவுகளே வரல.. அதற்குள் இப்படியா.. ஜார்க்கண்ட் காங்கிரஸ் கூட்டணியில் வெடித்த குழப்பம்?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த முறை அங்கு இரு தரப்பும் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டது. அதேநேரம் காங்கிரஸ் தலைவர்கள் பெரியளவில் இது பிரச்சாரம் செய்யவில்லை என்றும் ஜேஎம்எம் தனித்துவிடப்பட்டதாகவும் முணுமுணுப்புக்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தி ஹார்ட்லேண்ட் மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சீட்கள் உள்ளன. அங்கு 41 கட்சிகளில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியை அமைக்கவுள்ளது.

ஜார்க்கண்ட் தேர்தல்: ஜார்க்ண்டில் இப்போது ஜேஎம்எம்- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி உள்ளது. மறுபுறம் எதிர்க்கட்சி வரிசையில் பாஜக உள்ளது. இரு தரப்புமே வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளது. இதற்காக அவர்கள் மாநிலம் முழுக்க கடந்த சில மாதங்களாகவே பிரச்சாரங்களை மேற்கொண்டனர். அதேநேரம் இரு தரப்பு பிரச்சாரத்தில் நம்மால் ஒரு வேறுபாட்டைப் பார்க்க முடிந்தது.
அதாவது, ர்க்கண்டில் மாநிலத்தில் பாஜக சார்பில் நடந்த பல்வேறு பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடியும் அமித் ஷாவும் கலந்து கொண்டனர். ஆனால், ஆளும் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணியில் இதேதான் நிலைமை என்று நம்மால் சொல்ல முடியாது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தலா 6 பிரச்சார கூட்டங்களில் மட்டுமே கலந்து கொண்டு இருந்தனர். அவை அனைத்துமே காங்கிரஸ் வேட்பாளர்கள் பங்கேற்கும் தொகுதிகளில் நடந்தவை ஆகும். அவர்கள் ஜேஎம்எம் உட்பட எந்தவொரு கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்யவில்லை. இதனால் ஹேமந்த் சோரன் தரப்பு அதிருப்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் விளக்கம்: மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல் மற்றும் வயநாடு உள்ளிட்ட இடைத்தேர்தல் பணிகளைக் கவனிக்க வேண்டி இருந்ததாலேயே மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஜார்க்கண்டில் அதிகளவில் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்கிறார்கள். அதேநேரம் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஜார்க்கண்டில் தேவையான கட்சி பணிகளைக் கவனித்ததாகத் தெரிவித்தனர். காங்கிரஸ் மட்டுமின்றி கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றியும் தங்களுக்கு முக்கியம் என்றும் தொண்டர்கள் அந்த பணிகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கிறார்கள்.
அதிருப்தி: இது என்னதான் ஹேமந்த் சோரன் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அதைப் பொதுவெளியில் காட்டிக் கொள்ளவில்லை. ஹேமந்த் சோரனும் சரி, அவரது மனைவி கல்பனா சோரனும் சரி மாநிலம் முழுக்க தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். இருவரும் 90க்கும் மேற்பட்ட பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவும் ஜார்க்கண்டில் பிரச்சாரம் செய்து இருந்தார்.
இதனால் காங்கிரஸ் தலைவர்கள் பெரியளவில் பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும் கூட அது தங்கள் வெற்றியைப் பாதிக்காது என்றே ஜேஎம்எம் தலைவர்கள் சொல்கிறார்கள்.. எது எப்படி இருந்தாலும் ஜார்க்ண்ட் மக்கள் யாருக்கு ஆதரவளித்துள்ளனர்.. எந்தக் கட்சி அல்லது கூட்டணி அங்கு ஆட்சியை அமைக்கப் போகிறது என்பது இன்னும் 3 நாட்களில் தெரிந்துவிடும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 91 சீட்கள் உள்ள நிலையில், அங்கு அதிகபட்சமாக 41 சீட்களில் ஜேஎம்எம் கட்சி போட்டியிடுகிறது. மறுபுறம் காங்கிரஸ் 30 தொகுதிகளில் களமிறங்குகிறது. கூட்டணியில் உள்ள ஆர்ஜேடி 6 தொகுதிகளிலும், இடதுசாரிகள் நான்கு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
பாஜக கூட்டணியில் பாஜக அதிகபட்சமாக 68 சீட்களில் போட்டியிடுகிறது. அந்த கூட்டணியில் உள்ள ஏஜேஎஸ்யு கட்சி 10 இடங்களில் போட்டியிடும் நிலையில், ஜேடியு 2 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications