"யார் அவன்".. மனைவியை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடுமை.. மொத்தம் 7 மணி நேரம்.. கொந்தளித்த பாஜக
மனைவியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கணவனை போலீசார் கைது செய்தனர்
ஜெய்ப்பூர்: மனைவி மீது சந்தேகப்பட்ட கணவர், ஈவிரக்கமே இல்லாமல் அந்த பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. போலீசாரும், கோர்ட்டும், இது தொடர்பான வழக்குகளில் எவ்வளவோ அறிவுரைகளை சொல்லி, கடிவாளங்களை போட்டாலும், தண்டனை வழங்கினாலும், குற்றங்கள் குறைவதில்லை.
பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் அதிகரித்தபடியே உள்ளன.. போக்சோ சட்டங்கள் இருந்தும், போதுமான பலனை அது பெற்று தரவில்லை என்றே தெரிகிறது..
பெண்களும், குழந்தைகளும், பொதுஇடங்களிலும், சொந்த குடும்பத்தினராலுமே, சித்ரவதை செய்யப்படும் அட்டகாசமும் பெருகி வருகிறது.. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது...

கட்டி வைத்து அடித்தனர்
ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து 6 பேர் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.. கடந்த 25-ம்தேதி இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.. சம்பந்தப்பட்ட பெண், தன்னுடைய அத்தை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.. அப்போது வழியில் ,அவருக்கு தெரிந்த ஆட்டோக்காரர் ஒருவர் வந்துள்ளார்.. அவரும், இந்த பெண்ணும் ஒரே பகுதியில் வசிப்பவர்களாம். தெரிந்த நபர் என்பதால், தன்னை தன்னுடைய அத்தை வீட்டில் விட்டுவிடும்படி கேட்டுள்ளார்.. அவரும், பெண்ணை தன்னுடைய ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்று, பெண்ணின் அத்தை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டார்..

அத்தை
ஆனால், இன்னொரு நபருடன் ஆட்டோவில் வந்து இறங்குவதை பார்த்த அத்தை, இதை கணவருக்கு போனை போட்டு சொல்லி உள்ளார்.. அந்த ஆட்டோக்காரர் யார் என்று கூட விசாரிக்காத கணவரோ, உறவினர்களுடன் கிளம்பி அத்தை வீட்டுக்கு வந்தார். மனைவியை அங்கிருந்த மரத்தில் கட்டிப்போட்டு அடித்துள்ளார்.. மொத்தம் 7 மணி நேரம் மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.. கணவர் உட்பட 6 பேர் அடித்துள்ளனர்.. இதை யாரோ வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்துவிடவும், அது வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளது..

காயங்கள்
காரணம், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.. இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, வன்முறை பெருகிவிட்டது என்ற விமர்சனத்தை முன்வைத்து வருகிறது.. மற்றொரு புறம் இந்த வீடியோவையும், வைரலாக்கி வருகிறது.. இது தொடர்பாக போலீஸ் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.. சம்பவம் பற்றி உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் சொன்னதாவது:

உடம்பெல்லாம் காயங்கள்
"நடந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணையில் ஈடுபட்டோம்.... குற்றச்செயலில் நேரடியாக ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், 2 பேர் சிறுவர்கள்.. ஆனால் 6 பேருமே கணவனின் வீட்டை சார்ந்தவர்கள் ஆவர்.. இப்போது அந்த பெண்ணுக்கு உடம்பெல்லாம் காயங்கள் உள்ளன.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம்.. உரிய சிகிச்சை தரப்பட்டு வருகிறது" என்றார்.

விஸ்வரூபம்
இதனிடையே, பாஜக இளைஞரணி பிரிவு தேசிய செயலாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா இந்த வீடியோவை, ட்விட்டரில் பதிவிட்டு, தேசிய மகளிர் ஆணையத்தையும் டேக் செய்துவிட்டார்.. இதையடுத்து, ராஜஸ்தான் காவல்துறையை தொடர்பு கொண்டு உரிய விசாரணை நடத்தவுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு பதில் அளித்துள்ளது... தேசிய மகளிர் ஆணையம் இதில் தலையிடுவதால், விவகாரம் விஸ்வரூபமெடுக்கும் என்கிறார்கள்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications