For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வருமான வரி தேவையா? கேட்கிறார் சுப்ரமணியன் சுவாமி!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் நிலையில், வருமான வரி எதற்கு? என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

ஏதேனும் கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் சுப்ரமணிய சுவாமி, வருமான வரி என்ற ஒன்று இனியும் தேவைதானா என புதிதாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:

நிலக்கரி சுரங்கங்களில் ஒரு பகுதியை ஏலம் விட்டதில் ரூ.80 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் அடுத்து 2 ஜி ஏலம் விடப்பட உள்ளது.

அப்படி இருக்கும் போது ஏன் வருமான வரி என்ற ஒன்று வேண்டும்? என்று அவர் கேட்டுள்ளார்.

இதற்கு மோடி அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

English summary
BJP leader Subramanian Swamy said his twitter page, Coal block auction gave govt Rs 80 000 crores. At this rate for partial auction and 2G we do we need Income Tax?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X