அர்ச்சனாவை அனுப்புங்க.. ஒடிசாவிற்கு "முக்கிய" ஐஏஎஸ் அதிகாரியை வேகமாக அனுப்பிய ஸ்டாலின்? யார் இவர்?
புவனேஷ்வர்: ஒடிசாவில் விபத்துக்கு உள்ளான ரயிலில் தமிழர்கள் இருக்கலாம் என்பதால் தமிழ்நாட்டில் இருந்து முக்கிய மீட்பு படையை முதல்வர் ஸ்டாலின் அனுப்பி உள்ளார்.
ஒடிசா ரயில் விபத்துகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் செய்த இரங்கல் ட்விட்டில் , ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒடிசா மாநிலத்தில் #CoromandelExpress விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக மாண்புமிகு ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களைத் தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களையும், மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன். உடனடியாக ஹெல்ப்லைன் உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறி உள்ளார்.
அறிக்கை: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (02.06.2023) மாண்புமிகு ஓடிசா மாநில முதலமைச்சர் திரு. நவீன் விபத்து குறித்து விசாரித்து தனது அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்தார். பட்நாயக் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு. இரயில் மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துக் கொண்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இரயில் விபத்தில் காயம காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும்.
தேவைப்படின், தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஓடிசா மாநில முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொண்டார். மேலும் மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ்.சிவசங்கர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. க.பணீந்திர ரெட்டி. இ.ஆ.ப. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. குமார் இ.ஆ.ப., ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் இ.ஆ.ப. ஆகியோர் கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஓடிசா மாநிலத்திற்கு விரைந்து செல்ல மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இவ்விபத்து குறித்து தகவல்களை அளிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது.
ஏன் அர்ச்சனா? : இதில் ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஒடிசா செல்ல முக்கிய காரணம் உள்ளது. அவர் ஒடிஸாவை சேர்ந்தவர். அங்கே பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு கேடர் என்றாலும் ஒடிசாவில் சில காலம் இவருக்கு பணிகள் வழங்கப்பட்டன.
அங்கே அதிகாரிகளை தெரிந்த அனுபவம் கொண்ட நபர் இவர். இதனால் அவர் ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவராக இருந்தாலும் கூட.. அவரையும் ஒடிஷா அனுப்பும்படி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் இரண்டும் ஒடிஷாவில் விபத்து உள்ளாகி இருக்கிறது. இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதன் 10-12 பெட்டிகள் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.
இந்த தகவல் காட்டு பகுதி என்பதால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. போன் மூலமும்,யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அந்த பாதையில் செல்லும் ரயில்கள் எதையும் தடுக்க முடியவில்லை.
இந்த நேரத்தில்தான் சிறிது நேரம் கழித்து, பெங்களூர் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அருகில் இருந்த தடத்தில் வந்துள்ளது. அந்த தடத்தில் இருந்த தடம் புரண்ட பெட்டிகள் மீது பெங்களூர் ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த விபத்தில் இதுவரை 70 பேர் பலியாகி உள்ளனர். 300 பேர் காயம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications