அது ஏன் கெஜ்ரிவாலை எல்லாரும் கழுத்திலேயே அடிக்கிறாங்க, குத்துறாங்க?
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலுக்கு இதுவரை மூன்று முறை கழுத்தில் அடி விழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு இடங்களில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் அவருக்கு குத்து, அறை விழுந்துள்ளது.

வாரனாசி
பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி போட்டியிடும் வாரனாசியில் கெஜ்ரிவால் திறந்த ஜீப்பில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் மீது கருப்பு மை வீசப்பட்டது.

ஹரியானா
கெஜ்ரிவால் ஹரியானா மாநிலத்தில் உள்ள சக்ரி தாத்ரி பகுதியில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது திடீர் என்று ஒருவர் கெஜ்ரிவாலை கழுத்தில் தாக்கிவிட்டார். உடனே ஆம் ஆத்மி கட்சியினர் அந்த நபரை பிடித்து அடித்து உதைத்தனர்.

டெல்லி
தெற்கு டெல்லியில் உள்ள தக்ஷின்புரி பகுதியில் கெஜ்ரிவால் திறந்த ஜீப்பில் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் கெஜ்ரிவாலின் கழுத்தில் இரண்டு குத்துவிட்டதுடன் அறையவும் செய்தார். இதை பார்த்து கோபம் அடைந்த ஆம் ஆத்மி கட்சியினர் அந்த நபரை பிடித்து நையப் புடைத்தனர்.

ஆம் ஆத்மி
தன்னை யார் தாக்கினாலும் அவர்கள் மீது வன்முறையை பிரயோகப்படுத்தக் கூடாது என்று கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications