சாலையோரம் ப்ரிட்ஜ் வைத்த கேரளத்து பெண்: யாருக்காக?
கொச்சி: கேரளாவை சேர்ந்த உணவக உரிமையாளரான பெண் ஒருவர் பசியால் வாடுவோரின் நலனை கருதி சாலையோரம் குளிர்சாதன பெட்டியை வைத்துள்ளது பற்றி பலரும் ஃபேஸ்புக்கில் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மினு பாலின். அவர் கொச்சியில் பப்படவடா என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். ஒரு நாள் அவர் தனது உணவகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது உணவகத்தின் அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் உணவு எதுவும் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் சிலர் குப்பையை கிளறியதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பசியால் வாடுவோருக்கு தம்மால் முடிந்த உதவியை செய்ய தீர்மானித்தார். இதையடுத்து அவர் 420 லிட்டர் குளிர்சாதன பெட்டி ஒன்றை தனது உணவகத்திற்கு வெளியே சாலையோரம் வைத்தார்.
பசியால் வாடுவோருக்கு உணவளிக்க விரும்பும் யார் வேண்டுமானாலும் இந்த குளிர்சாதன பெட்டியில் உணவை வைக்கலாம். அதை தேவைப்படுவோர் எடுத்து சாப்பிடலாம். இந்த குளிர்சாதன பெட்டிக்கு பாலின் நன்மை மரம் என பெயர் வைத்துள்ளார்.
பசியால் வாடும் மக்களுக்கு உதவும் வகையில் குளிர்சாதன பெட்டியை சாலையோரம் வைத்த பாலினை பலரும் ஃபேஸ்புக்கில் பாராட்டி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications