பெட்ரோல், டீசலை ஏன் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரக்கூடாது- ப. சிதம்பரம்
பெட்ரோல், டீசல் எரிபொருட்களை சரக்கு மற்றும் சேவை வரம்புக்குள் மத்திய அரசு ஏன் கொண்டு வரக் கூடாது? என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டிவிட்டது, பெட்ரோல், டீசல் எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் மத்திய அரசு ஏன் கொண்டு வரக் கூடாது? என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு மக்களுக்கு விரோதமாக நடந்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
2018-19ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் மத்திய அரசை விமர்சித்து ப.சிதம்பரம் இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ப. சிதம்பரம் ட்விட்டர் பதிவு
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடன் வாங்கும் அளவு, பங்குகளை விற்பனை செய்தல், நிதிப் பற்றாக்குறை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி ஆகியவை குறித்தும் கடுமையாக ப.சிதம்பரம் விமர்ச்சித்துள்ளார்.
|
விண்ணை முட்டும் விலை
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டிவிட்டது. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து மக்களை நசுக்கி வருகிறது. மத்திய அரசு மக்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகிறது.
|
பெட்ரோல்,டீசல் ஜிஎஸ்டி
மக்களுக்கு பயன் கிடைக்கும் வகையில், நிம்மதி கிடைக்குமாறு, பெட்ரோல், டீசல் எரிபொருட்களை சரக்கு மற்றும் சேவை வரம்புக்குள் மத்திய அரசு ஏன் கொண்டு வரக் கூடாது?.
|
ஒஎன்ஜிசி நிறுவனம்
மத்திய அரசு கடன் வாங்கும் அளவை ரூ. 30 ஆயிரம் கோடி குறைத்துவிட்டதாகக் கூறி வருகிறது. ஆனால், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் 51.1 சதவீத பங்குகளை வாங்கியதற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கொடுக்கிறது.
|
இரண்டுமே ஒன்றுதான்
அரசு கடன் பெறுவதை குறைத்ததற்கும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அரசுக்கு பணம் கொடுப்பதற்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை. இரண்டும் ஒன்றுதான். இதன் மூலம், ரூ. 30 ஆயிரம் கோடி நிதிப்பற்றாக்குறை வரத்தான் செய்யும்.
|
வரி வருவாய் அறுவடை
பெட்ரோலுக்கும், டீசலுக்கும் மிகப்பெரிய அளவுக்கு உற்பத்தி வரி விதித்து மத்திய அரசு மிகப்பெரிய வரி வருவாயை அறுவடை செய்து வருகிறது. ஆனால், அந்த வருவாய் முழுவதும் தேவையில்லாமல் வீணாக செலவு செய்யப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications