இமயமலையில் மனிதன் உருவாக்கிய "பேரழிவு!" புதையும் ஜோஷிமத் நகரம்.. என்னதான் காரணம்! வல்லுநர்கள் பகீர்
டேராடூன்: இமயமலை அருகே அமைந்துள்ள ஜோஷிமத் நகரம் புதையத் தொடங்கியுள்ளது.. இந்த பேரழிவுக்கு மனிதர்களே காரணம் என்றே பல்வேறு வல்லுநர்களும் ஆதாரங்களுடன் கூறி வருகின்றனர்.
உத்தரகண்ட்டில் இமயமலை அருகே அமைந்துள்ள அழகிய நகரம் தான் ஜோஷிமத். ஆன்மீக சுற்றுலா செல்பவர்களுக்கும் சரி, இமயமலை ஏற வருவோர்களுக்கும் சரி இந்த ஜோஷிமத் நகர் தான் நுழைவாயிலாக அமைந்துள்ளது.
இப்படி சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து அங்கு வந்து வந்து கொண்டிருப்பதால் விடுதிகள் மற்றும் வணிக நிறுவனங்களும் அங்குக் காளான்கள் போல முளைத்தன. ஆனால், அதுவே பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

ஜோஷிமத் நகர்
இந்த ஜோஷிமத் நகர் சுமார் 1890 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக அக்கம்பக்கத்தினர் இங்குக் குடிபெயர்வதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திட்டமிடப்படாத மற்றும் கண்மூடித்தனமான வளர்ச்சியே ஜோஷிமத் நகரை மிகப் பெரிய ஆபத்தில் தள்ளியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோஷிமத் நகரில் இருக்கும் முக்கிய சாலைகள் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்படத் தொடங்கியன. அங்கிருந்த கோயிலும் கூட அப்படியே சரிந்தது.

வல்லுநர் குழு
இப்படி ஜோஷிமத் நகர் திடீரென புதைய ஆரம்பித்துள்ளது.. நல்வாய்ப்பாக இதில் உயிரிழப்புகள் எதுவும் பெரிதாக ஏற்படவில்லை. அங்கு ஆபத்தான ஒரு சூழல் நிலவுவதால்.. அங்கு வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்குத் தங்க அரசே வாடகை அளிக்கும் என அறிவித்தார். இருப்பினும், மக்கள் தங்களுக்கு நிரந்தர தீர்வை அரசு அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜோஷிமத் புதைவது குறித்து ஆராய்வு செய்ய வல்லுநர் குழு ஒன்றையும் அமைத்து உத்தரகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

மோசமான பாதிப்பு
ஜோஷிமத்தில் நிலம் மிக மோசமான நிலையில் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது அங்குச் சீர் செய்ய முடியாத அளவுக்கு மோசமான ஒரு சூழலே நிலவுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.. எந்தவொரு முறையான திட்டமும் இல்லாமல் ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பே அங்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக மாறுகிறது. இது அந்த நகரை மட்டுமின்றி, ஏற்கனவே பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படு வரும் இமயமலை சுற்றுச்சூழலையும் மிக மோசமாகப் பாதிக்கிறது.

என்ன காரணம்
ஜோஷிமத்தில் நிலச்சரிவு சம்பவங்கள் 1970களிலும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய அப்போதே கர்வால் கமிஷனர் மகேஷ் சந்திர மிஸ்ரா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு 1978இல் தங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்தது.. அதில் ஜோஷிமத் நகரம், நிதி மற்றும் மானா பள்ளத்தாக்குகளில் பெரிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படக்கூடாது என்று கூறப்பட்டிருந்தன. ஏனென்றால், இவை இந்த பகுதிகள் மொரைன்கள் எனப்படும் பாறைகள், வண்டல் மற்றும் மண் அடங்கிய பிரதேசத்திற்கு மேல் அமைந்துள்ளது.

மனிதர்கள் உருவாக்கியது
நாம் சுற்றுச்சூழலை எந்தளவுக்கு மோசமான ஒன்றாக மாற்றுகிறோம் என்பதை இந்த ஜோஷிமத் சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது என்று வல்லுநர் அஞ்சலி பிரகாஷ் தெரிவித்தார். முறையாக எந்தவொரு திட்டமும் இல்லாமல் இப்பகுதிகளில் தொடங்கப்பட்ட கட்டுமானங்களே இதற்குக் காரணம்.. எனவே தான் இந்த அழிவு மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று என்றே பார்க்கலாம் என்று ரூர்க்கி ஐஐடியின் சிவில் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் சத்யேந்திர மிட்டல் தெரிவித்தார்.

என்ன நடக்கிறது
அவர் மேலும் கூறுகையில், "பாதிக்கப்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுரங்கப்பாதை பணிகள் நடந்து வருகிறது. இன்னும் அதன் லைனிங் கூட முடிவடையவில்லை. எனவே, சுரங்கப்பாதை பணிகள் காரணமாக அடியே நீர் ஒரு இடத்தில் நிச்சயம் குவிந்து கொண்டிருக்கும்.. இது ஹைட்ரோஸ்டேடிக் அழுத்தத்தை அதிகரிக்கிறது.. இதுவே நிலம் திடீரென சரியக் காரணமாக இருக்கிறது" என்றார்.

மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு
காங்கிரஸ் கட்சியிலும் ஜோஷிமத் சம்பவத்தை மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்றே குறிப்பிட்டுள்ளது. இதைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், நிபுணர்கள் அப்பகுதியை ஆய்வு செய்து அறிக்கையைச் சமர்ப்பிக்கும் வரை அப்பகுதியில் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இன்று புதையும் ஜோஷிமத் நகரை வல்லுநர் குழு மீண்டும் ஆய்வு செய்கிறது.
-
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications