இத்தனை நாளா எங்கே போனீங்க! பாஜக கூட்டணி எம்எல்ஏவின் கன்னத்தில் ஓங்கியறைந்து கேட்ட பெண்! பரபர ஹரியானா
அம்பாலா: ஹரியானா மாநிலத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற ஆளும் பாஜக கூட்டணி கட்சியின் எம்எல்ஏவின் கன்னத்தில் பெண் தாக்கியதோடு, ‛‛இப்போது ஏன் இங்கே வந்தீர்கள்'' என கேள்வி எழுப்பி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, இமாச்சல பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக வெள்ள பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. டெல்லி யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

இமாச்சல பிரதேசத்தில் ஏராளமான மக்கள் வெள்ளத்தால் வீடுகளை இழந்துள்ளனர். இங்கு வரை 88 பேர் மழை வெள்ளத்துக்கு பலியாகி உள்ள நிலையில் 16 பேர் மாயமாகி உள்ளனர். 100 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேபோல் ஹரியானா மாநிலத்திலும் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அம்பாலா உள்பட பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அதேபோல் குல்லா பகுதியில் காகர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தடுப்பணை உடைந்தது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மேலும் மக்கள் பிரதிநிதிகள் யாரும் அவர்களுக்கு உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் விரக்தியடைந்தனர். இந்நிலையில் தான் ஹரியானாவை ஆளும் பாஜகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜேஜேபி எனும் ஜனயாக் ஜனதா கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஈஸ்வர் சிங் நேற்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்றார்.
அப்போது அங்கு வசிக்கும் மக்கள் அவரை சூழ்ந்து எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த வேளையில் இப்போது மட்டும் ஏன் இங்கே வந்தீர்கள்? எனக்கூறி பெண் ஒருவர் எம்எல்ஏ ஈஸ்வர் சிங்கின் கன்னத்தில் அடித்தார். அதாவது எம்எல்ஏ ஈஸ்வர் சிங் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்திருந்தால் அணை உடைந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இருக்காது என அந்த பெண் மற்றும் பொதுமக்கள் ஆக்ரோஷத்தை வெளிக்காட்டினர்.

இதையடுத்து அங்கிருந்த போலீஸ்காரர் அந்த பெண்ணை தடுத்து அனுப்பி வைத்தார். இச்சம்பவம் குறித்து எம்எல்ஏ ஈஸ்வர் சிங் கூறுகையில், ‛‛மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தபோது என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நான் நினைத்து இருந்தால் அணை உடைவதை தடுத்து இருக்கலாம் என என்னிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது இது இயற்கை பேரிடரால் உடைந்ததாக எடுத்து கூறி விளக்கமளித்தேன்'' என்றார்.
இதற்கிடையே மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற எம்எல்ஏ ஈஸ்வர் சிங்கை, பெண் ஒருவர் கன்னத்தில் அடித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications