புலம்பெயர்பவர்கள் வாழ இந்தியா ஒத்து வராதாம்: காரணம் இது தான்
டெல்லி: புலம்பெயர்ந்தவர்கள் வாழ லாயக்கு இல்லாத 10 மோசமான நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது தெரிய வந்துள்ளது.
புலம்பெயர்ந்தவர்களின் மிகப் பெரிய சமூக வலைதளமான இன்டர்நேஷன்ஸ் புலம்பெயர்ந்தவர்கள் வாழ மோசமான நாடுகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது. அந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் புலம்பெய்ந்தவர்கள் வாழ தகுதியில்லாத மோசமான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு,

இந்தியா
புலம்பெயர்ந்தவர்கள் வசிக்க மோசமான 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை
இந்தியாவில் பணிபுரியும் புலம்பெயர்ந்தவர்கள் ஒரு வாரத்தில் சராசரியாக 46.5 மணிநேரம் வேலை பார்க்கிறார்கள். அதாவது சராசரியை விட கூடுதலாக 3 மணிநேரம் வேலை பார்க்கிறார்கள்.

சமநிலை
இந்தியாவில் புலம்பெயர்ந்தவர்கள் கூடுதல் நேரம் வேலை செய்கிறார்கள். இதனால் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சமநிலையில் இல்லை.

அமெரிக்கர்கள்
இந்தியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்களில் 24 சதவீதம் பேர் அமெரிக்கர்கள், 10 சதவீதம் பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், 10 சதவீதம் பேர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள்.

ஏன்?
வெளிநாட்டவர்கள் புலம் பெயர்வதற்கான முன்று முக்கிய காரணங்கள் தெரிய வந்துள்ளது. வேலை காரணமாக புலம்பெயர்வதாக 16 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். காதலுக்காக புலம்பெயர்வதாக 13 சதவீதம் பேரும், சாகசத்தை தேடி புலம்பெயர்வதாக 13 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications