"இவன் என்னை கிள்ளிட்டான்".. ஊர் கிரிக்கெட்ல கூட இப்படி அழ மாட்டாங்க! கதறிய ஆஸி.. இந்தியா செய்தது என்ன
உள்ளூர் கிரிக்கெட்டில் சிலர் தோற்று போக போகிறார்கள் என்று தெரிந்துவிட்டால் ஆட்டத்தில் இது சரியில்லை, அது சரியில்லை என்று புகார் வைத்துக்கொண்டு, சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள்.
நாக்பூர்: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் நடந்து வருகிறது. இந்த தொடர் தொடங்கியதில் இருந்தே ஆஸ்திரேலிய தரப்பு இந்தியாவிற்கு எதிராக பல்வேறு புகார்களை வைத்து வருகிறது. இவன் என்னை கிள்ளிட்டான் என்று பள்ளியில் குட்டிப்பையன் அழுவது போல சம்பந்தமே இல்லாமல் பல்வேறு விஷயங்களுக்கு ஆஸ்திரேலிய தரப்பு அழுதபடி இருக்கிறது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாக்பூரில் நடந்து வரும் இந்த போட்டியில் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா மீது இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 250 ரன்களாவது எடுக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலர் கணித்து இருந்த நிலையில் 177 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா சுருண்டு உள்ளது. இதையடுத்து தற்போது இந்தியா முதல் இன்னிங்சில் 400 ரன்கள் எடுத்து 223 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பிட்ச் புகார்
இந்த போட்டி தொடங்கியதில் இருந்தே பல்வேறு விஷயங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் பல்வேறு விஷயங்களுக்கு ஆஸ்திரேலிய தரப்பு அழுதபடி இருக்கிறது. இந்த தொடர் தொடங்கும் முன்பே ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள், ஜாம்பவான்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் நாக்பூர் பிட்ச் குறித்து புகார் வைத்தனர். இந்த பிட்சை ஸ்பின் பிட்சாக உருவாக்க கூடாது. பிட்சை நியாயமாக உருவாக்க வேண்டும். டர்னிங் பிட்சாக இருந்தால் அது இந்தியாவிற்கு முற்றிலுமாக சாதகமாக இருக்கும். பிட்ச் நியாயமாக இருந்தால் ஆஸ்திரேலியா இந்த தொடரை வெல்லும் . ஆனால் இந்தியா அப்படி இந்த பிட்சை உருவாக்குமா என்பது சந்தேகம்தான் என்று விமர்சனம் வைத்தனர். அதாவது சீரியஸ் தொடங்கும் முன்பே ஆஸ்திரேலியா பிட்ச் குறித்து புகார் வைத்தது.

மாற்றிவிட்டதாக புகார்
அதன்பின் பிட்சை இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக உருவாக்கியதாகவும் ஆஸ்திரேலியா புகார் வைத்தது. இந்த பிட்ச் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமாக வடிவைமைக்கப்பட்டு உள்ளது என்று புகார் வைக்கப்பட்டது. நாக்பூர் பிட்ச் கியூரேட்டர் அபிஜீத் பிப்ரோடுடன் ராகுல் டிராவிட் இது தொடர்பாக பேசி இருக்கிறார். இதனால் பிட்சில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி பிட்சில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. பிட்சில் குறைவான புற்கள் இருக்கும் வகையில், பிட்ச் பெரும்பாலும் வறண்டு, பிளாட்டாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டது.

ஹோம் அணிகள்
பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் ஹோம் அணிகள் தங்களுக்கு ஏற்றபடி பிட்சை வடிவமைப்பது வழக்கம்தான். ஆனால் ஆஸ்திரேலியாவின் லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன்கள் திணறும் வகையில் ஒரு பக்கம் புற்களை செதுக்கி அவர்களுக்கு ஏற்றபடி பிட்ச் அமைக்கப்பட்டு உள்ளது என்று ஆஸ்திரேலியா தரப்பு வைத்தது. பிட்சை பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வல்லுனர்கள் பலர் நாக்பூர் பிட்சை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இருப்பினும் இந்தியா அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் களமிறங்கியது. முக்கியமாக இந்தியாவின் இரண்டு லெப்ட் ஹேண்ட் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல், ஜடேஜா இருவரும் இந்த பிட்சில் சிறப்பாக ஆடி ஆஸ்திரேலியாவின் இந்த விமர்சனம் பொய் என்று நிரூபித்தனர்.

குவாஜா
இது போக ஆஸ்திரேலியாவின் குவாஜாவின் விக்கெட்டையும் ஆஸ்திரேலியா விமர்சனம் செய்தது. முதல் இன்னிங்சில் 1 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் சிராஜ் ஓவரில் ஓவர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். முதலில் நடுவர் விக்கெட் கொடுக்காத நிலையில் ரிவ்யூ எடுத்து இவரின் விக்கெட்டை சிராஜ் எடுத்தார். ஆனால் இந்த விக்கெட்டும் தவறானது, பால் டிராக்கிங்கில் தவறு இருக்கிறது, பந்து ஸ்டம்பை மோதி இருக்க வாய்ப்பே இல்லை, பால் டிராக்கிங்கில் எதோ தவறு உள்ளது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வல்லுனர்கள் பலர் புகார் வைத்தனர். இதையும் சர்ச்சையாக்கினார்கள்.

ஜடேஜா கை
அதன்பின் ஜடேஜாவின் காயத்தை விமர்சனம் செய்தனர். அவரின் காயத்திற்கு சிராஜ் மருந்து கொடுப்பதற்காக ஆயின்மென்ட் கொடுத்தார். அதை ஜடேஜா விரலில் தடவினார். ஆனால் இதை வைத்து கூட பால் டெம்பரிங் புகாரை ஆஸ்திரேலிய ஊடகங்களாக பாக்ஸ் போன்ற ஊடகங்கள் வைத்தன. கடைசியில் ஜடேஜா காயத்திற்குத்தான் மருந்து போட்டார் என்பது உறுதியானது. உள்ளூர் கிரிக்கெட்டில் சிலர் தோற்று போக போகிறார்கள் என்று தெரிந்துவிட்டால் ஆட்டத்தில் இது சரியில்லை, அது சரியில்லை என்று புகார் வைத்துக்கொண்டு, சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். தற்போது ஆஸ்திரேலிய அணியும் அதேபோல்தான் இந்திய அணி மீதும், பிட்ச் மீதும் கடுமையாக புகார்களை வைத்து வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications