கிரிக்கெட் சங்க ஊழல் பற்றி சிபிஐ விசாரணை: விடாமல் விரட்டி ஜேட்லிக்கு செக் வைக்கும் கீர்த்தி ஆசாத்
டெல்லி: அருண் ஜேட்லி மீதான குற்றச்சாட்டுக்கு காரணமான, டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக ‘சி.பி.ஐ. விசாரணை' நடத்தப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா எம்.பி. கீர்த்தி ஆசாத் வலியுறுத்தி உள்ளார். கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையிலும், ஆசாத் இவ்வாறு விடாப்பிடியாக கூறிவருகிறார்.
டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க முறைகேட்டில் 13 ஆண்டுகள் அதன் தலைவராக இருந்த அருண் ஜெட்லிக்கு தொடர்பு உள்ளது என்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நடந்துள்ளதாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத்தும் குற்றச்சாட்டை எழுப்பினார். ஜேட்லிக்கு எதிரான கருத்து இது என்று கூறி, கட்சிவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஆசாத்தை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து பாஜக உத்தரவிட்டது.
இந்நிலையில் டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக ‘சி.பி.ஐ. விசாரணை' நடத்தப்பட வேண்டும் என்று கீர்த்தி ஆசாத் தற்போது, வலியுறுத்தி உள்ளார். நான் கிரிக்கெட் வாரியத்தில் ஏற்பட்ட ஊழலுக்கு எதிராகவே போராடுகின்றேனே தவிர, அருண் ஜேட்லிக்கு எதிராக கிடையாது என்றும் கீர்த்தி ஆசாத் குறிப்பிட்டு உள்ளார்.
விளையாட்டில் ஊழல் நடைபெற்று இருப்பது பற்றி கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகின்றேன், இது தொடரும். இதில் அருண் ஜேட்லியை இழுக்காதீர்கள். டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நடைபெற்றது என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் சங்கத்திடம் ஆவணங்களை பகிர்ந்துக் கொண்டேன், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications