லோக்சபா தேர்தல்: வாரணாசியில் மோடியை எதிர்த்து கேஜ்ரிவால் போட்டியிட விரும்புவது ஏன்?
டெல்லி: லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் போட்டியிடக் கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் கேஜ்ரிவாலின் இந்த முடிவு சிறுபிள்ளைத்தனமானது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனாலேயே தமது சகாவான அமித்ஷாவை அம்மாநில பொறுப்பாளராகவும் மோடி நியமித்திருக்கிறார்.
ஆன்மீக நகரமான வாரணாசியில் எப்படியும் வென்றுவிட முடியும் என்பது மோடி மற்றும் பாஜகவினரின் நம்பிக்கை. அத்துடன் குஜராத் மாநில லோக்சபா தொகுதி ஒன்றிலும் மோடி போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அரவிந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் முதல்வர் ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார். இதே போல் தற்போது லோக்சபா தேர்தலில் நரேந்திரமோடியை எதிர்த்து நிற்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் வெறும் பரபரபுக்காகவும் ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும்தான் கேஜ்ரிவால் மோடியை எதிர்த்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் பரப்பப்படுகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மேலும் தமக்கு வேண்டியதை பெற்றுவிடுவதற்காக எப்படியாவது அழுது புரளும் ஒரு சிறு குழந்தையைப் போல எப்படியாவது ஊடக கவனம் பெறுவதற்காக கேஜ்ரிவால் இப்படி தகவலை பரப்பி வருவதாகவும் பாஜக தரப்பு சாடுகிறது.
கேஜ்ரிவாலைப் பொறுத்தவரை பரபரப்பு அரசியல் மூலம் ஊடக கவனத்தைப் பெறுவதில் எப்போதும் முனைப்பு காட்டுபவர். அன்னா ஹசாரேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனிக் கட்சி தொடங்கினார். பின்னர் டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை எதிர்த்து போட்டியிட்டார். அதைத் தொடர்ந்து முதல்வரான போது வீதியில் இறங்கிப் போராடினார். பின்னர் ஜன்லோக்பாலின் பெயரால் ராஜினாமாவும் செய்தார்.
இப்படியான பரபரப்பு நடவடிக்கைகள் மூலம் ஊடக தலைப்புச் செய்திகளில் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதன் மற்றொரு யுக்தியாகவே மோடிக்கு எதிராக கேஜ்ரிவால் போட்டியிடுவார் என்ற செய்திகளையும் பார்க்க வேண்டும் என்கின்றனர் மோடி ஆதரவாளர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications