Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு சிக்கல்.. பிராமணர்கள்- லோதி சமூகத்திற்கு இடையே மோதல்? உமாபாரதி சொன்னதை பாருங்க! மபி சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான உமா பாரதி மாநில அரசுக்கு எதிராகப் பொருள்படும் படி சில கருத்துகளைக் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் இப்போது சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக அரசு நடந்து வருகிறது. கடந்த 2019இல் நடந்த தேர்தலில் 114 இடங்களில் வென்று காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

இதையடுத்து அங்கு கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி சில மாதங்கள் நடைபெற்ற போதிலும், சிந்தியா ஆதரவாளர்கள் 22 பேர் பாஜகவில் இணைந்ததால் ஆட்சி கவிழ்ந்தது.

 மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசம்

அவர்கள் பாஜகவில் இணைந்த நிலையில், சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியைப் பிடித்தது. அடுத்தாண்டு இறுதியில் 5 மாநில தேர்தல் நடைபெறும் நிலையில், மத்தியப் பிரதேசத்திலும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் மெல்ல தங்கள் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டன. மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான உமாபாரதி, மபி சவுஹான் அரசுக்கு எதிராகப் பேசியுள்ளார்.

 உமா பாரதி

உமா பாரதி

போபாலில் லோதி சமூகத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் உமாபாரதி கலந்து கொண்டார். அப்போது அவரது பேச்சு தான் சர்ச்சையைக் கிளப்பியது. அவர் அங்குப் பேசுகையில், "பொதுமக்கள் வாக்களிக்கும் முன்பு எல்லா விஷயங்களையும் கருத்தில் கொண்ட பிறகே வாக்களிக்க வேண்டும். நான் எப்போதும் பாஜகவுக்கு விசுவாசமாக இருப்பேன். பாஜகவுக்கு வாக்களிக்கும்படி மக்களைத் தொடர்ந்து கேட்பேன். இருப்பினும், எனது லோதி சமூக மக்கள் யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லை. அவர்கள் அனைத்தையும் யோசித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவெடுக்கலாம்" என்றார்.

 பரபர பேச்சு

பரபர பேச்சு

மூத்த பாஜக தலைவர் ஒருவரே தனது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் யோசித்து வாக்களிக்க வேண்டும் என்றும் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது. கடந்த டிச. 25ஆம் தேதி லோதி சமூகத்தினர் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தான் அவர் இப்படிப் பேசியிருந்தார். அதில் மேலும், "லோதி சமூகத்தினர் பாஜகவுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என நான் உங்களிடம் ஒருபோதும் சொல்லியதில்லை. நான் பாஜகவுக்கு விசுவாசமாக இருப்பேன். அதேநேரம் நீங்களும் அதேபோல இருக்க வேண்டும் என நான் சொல்ல மாட்டேன்.

 வாக்களிக்கத் தேவையில்லை

வாக்களிக்கத் தேவையில்லை

உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் பாஜகவில் இல்லை என்றால், நீங்களே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளலாம். பாஜக மீது இருக்கும் அன்பால் நான் பாஜகவுக்குக் கட்டுப்பட்ட நபர். ஆனால் நீங்கள் எந்த அரசியல் கட்சிக்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லை" என்று அவர் கூறியிருந்தார். மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல் உள்ளிட்ட லோதி சமூகத்தைச் சேர்ந்த பல பாஜக தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னிலையில் தான் அவர் இப்படிக் கூறியிருந்தார்.

 முக்கிய சமூகம்

முக்கிய சமூகம்

மத்தியப் பிரதேசத்தில் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த ஓபிசி சமூகமாக லோதி சமூகம் உள்ளது. மாநிலம் முழுக்க இவர்கள் வசித்து வந்தாலும் கூட, குவாலியர், பந்தல்கண்ட் மற்றும் மஹாகோஷலின் சில பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள தலைவர் ப்ரீதம் லோதி, பிராமணர்களுக்கு எதிராக சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதாவது பிரமாணர்கள் முட்டாள்கள் என்றும் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் என்றும் கூறியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அவரை கட்சியில் இருந்தே நீக்கியது பாஜக.

 பிரமாணர்கள் உடன் மோதல்

பிரமாணர்கள் உடன் மோதல்

அதன் பிறகு மத்திய பிரதேசத்தில் லோதி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. உமாபாரதி மற்றும் பிரஹலாத் படேல் என வலுவான தலைவர்கள் உள்ளதால் அங்குள்ள லோதி சமூகத்தினர் பெரும்பாலும் பாஜகவுக்கே ஆதரவாக இருந்துள்ளனர். இந்தச் சூழலில் உமா பாரதியின் இந்தப் பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மத்தியப் பிரதேச அரசியலில் சில காலம் முக்கிய பதவிகளில் இல்லாத உமா பாரதி கம்பேக் கொடுக்க முயன்று வருகிறார். அதற்காக அவர் இந்த சாதி மற்றும் சமூகம் சார்ந்த விஷயத்தைக் கையில் எடுத்துள்ளார்.

 கையை பிசையும் சவுஹான்

கையை பிசையும் சவுஹான்

இது குறித்து பாஜக எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்தாண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுடன் இணைந்து மத்தியப் பிரதேசத்திலும் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலிலேயே பாஜகவால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க முடியவில்லை. சவுஹான் அரசுக்கு எதிராகக் காங்கிரஸ் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறது. காங்கிரஸை சமாளிப்பது மட்டுமின்றி, இப்போது உட்கட்சியிலேயே எழுந்த இந்த குரலையும் சவுஹான் சமாளித்தாக வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+